Pages

Monday, December 6, 2010

Real World Programming

 றியல் வேல்ட் புரோக்கிராம்

என் இனிய நண்பர்களை இந்த றியல் வேல்ட்  புரோக்கிராம் என்ற ஆய்வுக் கட்டுரை மூலம் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்
நண்பர்களே இன்றய கால கட்டத்தில் நாம் நம் பெற்றோரைப் பிரிந்து இருந்தாலும் கூட கணனியை பிரிந்து ஒரு நிமிடம் கூட இருப்பதில்லை அப்படிப்பட்ட கணனி பற்றி நாம் அறிந்து இருப்பது ஒருசில விடயம் மட்டுமே! இந்த உலகில் மனித உயிரினம் எப்படி ஒரு உன்னதமான படைப்போ அதே போல் கணனியும் ஒரு உன்னத படைப்பேயாகும் அது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
முன்னய காலத்தில் அதாவது 2000 இற்கு முற்பட்ட காலப்பகுதியில் கணனியில் எழுதப்பட்ட புரோக்கிராம்கள் ஒரு கணிப்பான் போன்றே எழுதப்பட்டது. உதாரணத்திற்கு ஒரு கடையில் உள்ள பொருட்கள் அதன் விலைப்பட்டியல் போன்றவற்றிகே எழுதப்பட்ட புரோக்கிராம்கள் விஞ்ஞான வளர்ச்சியினால் பார்கோட் ரீடர் உதவி மூலம். அந்த பொருளைக் காட்டிய உடனேயே விலை போன்றவற்றை கணிப்பிடும் வண்ணமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே இனிவரும் காலங்களின் நீங்கள் விரும்பிய பொருளை கடையில் காட்சிப் பெட்டியில் இருந்து எடுத்தவுடனேயே சென்சர் இன் உதவியுடன் உங்கள் பெயரில் பில் எழுதப்பட்டு விடும்.. இத்தகய வளர்ச்சியில் பங்கெடுப்பது தான் இந்த றியல் வேல்ட் புரோக்கிராமிங்..
"ஊரோடு ஒத்துவாழ்வோம்"
  அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் கூறுவார்களே “ஊரோடு ஒத்து வாழ்” அந்த கருத்தைக் கொண்டது தான் இந்த றியல் வேல்ட் புரோக்கிராமிங், உலகத்திற்கு என்ன தேவைப்படுகிறது என அறிந்து அதனை உலகிற்கு வழங்குவது தான் இது. கணனி உலகில் மைக்ரோ சொவ்ட் மற்றும் இணைய உலகில் நாம் அனைவரும் பயன்படுத்தும். Face Book, போன்றன எல்லாம் இவ்வாறே நமக்கு தேவையானவற்றை அறிந்து வழங்குகின்றன அதனால் தான் அவற்றால் எப்பொழுதும் முன்ணனியில் நிக்க முடிகிறது. இன்றய உலகில் இந்த றியல் வேல்ட் புரோக்கிராமிங்கிற்கு பாரிய வரவேற்ப்பு உள்ளது! இத் துறையில் தான் அனைத்து அதி நவீன உயர் தொழில் நுட்ப கருவிகள் உருவாகப்படுகிறது…

மனிதனும் றியல் வேல்ட் புரோக்கிராமிங்கும்.
அனைத்து கணனி சாதனங்களும் மனிதனால் கண்டுபிடிகப்பட்டவையே. கணனி என்பது பற்றி என்ன நினைக்குறீங்க???. நமக்கு எங்கும் எத்துறையிலும் உதவியாக இருக்கும் ஒரு சாதனம். ஆம் இந்த கருத்து உண்மையானது தான், ஆனால் இந்த கணனி எவ்வாறு தொழிற்படுகிறது. நாம் கணனியின் உட் செலுத்தும் அனைத்து Data களும் Binary code. ஆக ரீட் ஆகிறது என்ற ஒரு தப்பான கருத்து எங்கள் அனைவரிடமும் உள்ளது. கணனியினுள் நாம் உட்செலுத்தும் டேட்டா அனைத்தும் On,Off முறையில் தான் சேமிக்கப்படுகிறது On/Off என்பதன் குறிச்சொல்லாகத்தான் 010101010101010  என்னும் Binary code பயன்படுகிறது.
உலகிலேயே ஆம்/இல்லை (yes/no) வினாக்கள் தான் அதிகம். எந்த ஒரு வினாவையும் கேட்டுப்பாருங்கள் அனேகமான வினாவிற்கு பதிலாக ஆம் / இல்லை தான் வரும், இதன் அடிப்படையில் தான் கணனியில் தரவுகள் சேமிக்கப்பட்டு வருகிறது. இதே போல் தான் மனித மூளையிலும் தரவுகள் சேமிக்கப்பட்டு வருகிறது.
கணனிக்கும் மனித மூளைக்கும் என்ன வேறுபாடு என்றால்! கணனியில் புரோக்கிராம் புரோக்கிராமரால் எழுதப்படுகிறது! ஆனால் கடவுளின் உன்னத படைப்பில் ஒன்றான மனித மூளையில் உங்களுக்கான புரோக்கிராம் நீங்கள் வளரும் சூழலை வைத்தே எழுதப்படுகிறது! அன்றாடம் நீங்கள் சிறுவயதில் அறிபவை மற்றும் அனுபங்கள் எல்லாம் கணனி புரோக்கிராம் போன்று. சுயமாகவே மூளையில் அதிர்வுகள் மூலம் புரோக்கிராம் உருவாக்கப்படுகிறது. உங்கள் மூளை எச்சூழலில் எவ்வாறு புரோக்கிராம் பண்ணப்பட்டுள்ளதோ அவ்வாறுதான் நீங்கள் இயங்குவீர்கள்!!

 பயணம் தொடரும்......!!!!!!!!!!!!!


0 comments:

Post a Comment