Pages

Saturday, December 25, 2010

ஆன்லைன் இல் வீடியோ டிக்ஸ்னரி புதுமையிலும் புதுமை

டிக்ஸ்னரி பற்றி நமக்கு தெரியும் அது என்ன வீடியோ டிக்ஸ்னரி
என்றால் ஆன்லைன் -ல் நாம் தேடும் வார்த்தைக்கான அர்த்தத்தை
வீடியோவுடன் காட்டுகின்றனர் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


 ஆன்லைன் மூலம் டிக்ஸ்னரி பயன்படுத்தி இருப்போம், ஒவ்வொரு
டிக்ஸ்னரியும் பல சிறப்புகளுடன் இருக்கும் ஆனால் இதைப்போல்
ஒரு டிக்ஸ்னரி இதுவரை வந்ததில்லை என்று கூறும் அளவிறகு
வித்தியாசமாக உள்ளது. அதாவது நாம் தேடும் வார்த்தைக்கான
அர்தத்தை வீடியோவுடன் சொல்கிறது. ஒருவார்த்தை அல்ல 76,000
வார்த்தைகள் மற்றும் 1,20,000 definitions கள் உள்ளது இதைத்தவிர
தினமும் பல வார்த்தைகளுக்காகன வீடியோ பதிவேற்றம்
செய்யப்படுகிறது.

இணையதள முகவரி : http://www.wordia.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படத்தில் காட்டியபடி  Search the
visual Dictionary
என்ற கட்டத்திற்குள் வார்த்தையை கொடுத்து
தேட வேண்டியது தான் அடுத்து வரும் திரையில் வார்த்தைக்கான
அர்த்தமும் அதனுடன் வீடியோவும் வரும்.இதைத்தவிர வார்த்தைக்கான
Games
வசதியும் உள்ளது.தினமும் ஒரு வார்த்தைக்கான வீடியோவை
Latest word
என்ற தலைப்பில் காட்டுகிறது. Top Videos என்பதை
சொடுக்கி பிரபலமான டிக்ஸ்னரி வீடியோவை பார்க்கலாம்.
வழக்கமான டிக்ஸ்னரி பயன்படுத்தும் நமக்கு இந்த ஆன்லைன்
வீடியோ டிக்ஸ்னரி சற்று புதுமையாகவே இருக்கும்

2 comments:

  1. அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

    தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

    அன்புடன்,

    வலைச்சரம் நிர்வாகம்.

    ReplyDelete
  2. வலைச்சரம் நிர்வாகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete