Pages

Monday, March 11, 2013

தொலைபேசி மூலம் கதவு திறக்கலாம்


முன் வாயிலில் உள்ள கதவு மணி தொல்லையாக உள்ளதா? எந்த வேலை செய்துகொண்டு இருக்கும் நிலையிலும், இடையே வேலையை விட்டுவிட்டு கதாவைத் திறந்து வந்தவருக்கு பதில் சொல்வது கடினமான விடயமே. அதே நேரம், உங்களது வீட்டிற்கு யார் யார் வருகிறார்கள் என்பதை வெளி ஊரில் இருந்து அவதானிப்பதும் கடினமே. அதைவிட, குடும்பத்தோடு வெளியே செல்லும் நிலையில், வீட்டிற்கு வருபவர்களின் வருகையை இழந்து விடும் அதே நேரம், அவர்களுக்கு சரியான தகவலைக் கொடுக்க முடியாத நிலையில் இருப்போம். தற்பொழுது இருக்கவே இறுக்கிறது 'Doorbot'. இது எடிசன் ஜூனியர் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது.

பட்டரி மூலம் வைபை ஊடாக உங்களது நவீன தொலைபேசிமூலம் வீட்டு வாசலில் வந்து இருப்பவர் யார் என்பதை நேரடியாகப் பார்க்க முடிவதோடு, அவர்களோடு பேசவும் செய்யலாம். பொதுவான தொலைபேசி அழைப்பு போல் உங்கலது நவீன தொலைபேசியில் தோன்றும் இந்த அழைப்பை மேலும் மெருகூட்ட, 'Lockitron' என்ற சாதனம் இதனுடன் சேர்த்தால், உங்களது நவீன தொலைபெசியாலேயே கதவைத் திறக்கவும் மூடவும் செய்யலாம். பல தொலைபேசி மற்றும் டேபிலட் களில் இலகுவாக மென்பொருளை தரவிறக்கம் செய்து செயற்பட செய்ய முடியும். இந்த தொழிநுட்பத்தை செயல்படுத்த, Christiestreet என்ற இனைய தளத்தில் உதவி கோரப் பட்டுள்ளது.



0 comments:

Post a Comment