Pages

Monday, March 4, 2013

ஐபோன் ரூ.5,000 முதல் ரூ.7,500வரை கிசுகிசுக்கள் வெளியாகிறது


கடந்த வாரம் நடந்து முடிந்த சிஇஎஸ் 2013ல் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது படைப்புகளை வெளியிட்டன. பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் கலந்துகொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5S என அழைக்கப்படும் ஐபோன் 6 பற்றிய கிசுகிசு ஏராளமாக வந்துகொண்டே உள்ளன. அவற்றின் மொத்த தொகுப்பை இங்கே வெளியிட்டுள்ளோம்.
உலகம் அழியும்போது இப்படித்தான் இருக்கும்!
அதாவது ஆப்பிள் ஐபோன் 5S வரும் ஜுனுக்குள் வெளியாகுமெனத்தெரிகிறது. அதாவது ஜூன் மாதம் அல்லது மே மாதம் மொபைல் சந்தைகளில் எதிர்பார்க்கலாம். மேலும் இது 6 முதல் 8 வண்ண வேறுபாடுகளிலும் ஒன்றிற்கு மேற்பட்ட வடிவங்களிலும் கிடைக்குமாம்.
இந்த ஐபோன் 5S அதிக தரமுள்ள திரையுடனும், நல்ல கேமராவைகொண்டும் வெளியிடப்படும். மேலும் இதில் ஐஒஸ் 7 இயங்குதளம் இருக்கும்.
வருங்கால தொழில்நுட்பங்கள்!
மேலுமொரு தகவல் என்னவெனில் ஜூன் மாதத்திற்கு மேல் உள்ள கால இடைவெளியில் ஐபோனானது பல்வேறு விலை வித்தியாசங்களில் கிடைக்குமாம். அதிலும் மிகவும் குறைந்த விலைகளில் கிடைக்குமெனத்தெரிகிறது. இந்த குறைந்த விலை போன்கள் இந்தியா மற்றும் சீனா மொபைல் சந்தைகளை மட்டும் குறிவைத்து வெளியிடப்படும் எனத்தெரிகிறது.
விலைகள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை இருக்கலாம் என்கிறது. ப்லூம்பெர்க் இணையதளம் இதை உறுதிசெய்துள்ளது.
iphone5s

0 comments:

Post a Comment