உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

Pages

Thursday, March 14, 2013

மனிதனைத் தாக்கும் கம்ப்யூட்டர் வைரஸ்!

உலகம் முழுவதும் பரவலாக கம்ப்யூட்டர்களில் வைரஸ் பரவுவதை கேட்டு இருக்கிறோம். ஆனால் அந்த கம்ப்யூட்டர் வைரஸ் மனிதனையும் தாக்கும் அபாயம் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். மார்க் காஸ்சன் என்ற விஞ்ஞானி ஒருவர் கம்ப்யூட்டர்களை தாக்கும் வைரஸ் மனிதர்களுக்கு வைக்கப்படும் மைக்ரோ-சிப்பையும் பாதிக்குமா என்பதை கண்டறிய முனைந்தார். அதனை உறுதி செய்யும் பொருட்டு தனது கையில் வானலை அடையாளம் (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப்பை தனது கையில் பொருத்திக் கொண்டார்.
  
வானலை அடையாள (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப் வெளி நாடுகளில் வீட்டில் வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகளுக்கு பிறந்த உடனே பொருத்தி விடுவர். இதன் சிப் மூலம் அதனை மீண்டும் கண்டு பிடிப்பது எளிது. மார்க் காஸ்சன் என்ற விஞ்ஞானி தனது கையில் பொருத்திய சிப்பில் கம்ப்யூட்டர் வைரஸ் பரவச் செய்தார். பின்னர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளான அந்த மைக்ரோ சிப் அதை தொடர்புகொள்ளும் கம்ப்யூட்டர்களையும் தாக்குகிறது என்பதையும் நிரூபித்துள்ளார். இன்றைய வாழ்வில் மனிதர்களுக்கு ஹார்ட் பீஸ்மகேர்ஸ் மற்றும் பிரைன் ஸ்டிமுலேசன் யூனிட் போன்ற கருவிகள் இந்த வைரஸால் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும் சிப்கள் போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் மார்க் காஸ்சன் இந்த வைரஸ் அட்டாக் குறித்து கருத்து தெர்வித்துள்ள சோப்ஹோஸ் என்ற வைரஸ் சாப்ட்வேர் நிறுவனம், உடலுக்குள் வைக்கப்பட்டுள்ள மைக்ரோ சிப்பை படிப்பதற்கு ஆர் எப் ஐ டி ரீடர் வேண்டும் மேலும் அது எளிதான காரியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் மார்க் காஸ்சன், தனது ஆரய்ச்சி தொடரும் என்றும், நாம் போதிய எச்சரிக்கையுடன் இதுபோன்ற ஆர் எப் ஐ டி சிப்களை தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Wednesday, March 13, 2013

இணைப்புக்களைக் கொண்ட அபூர்வ புத்தகம் இதைத்தான் இன்ரேனல் லிங்கிங் எண்டு சொல்லுறவங்க போல இருக்கு..

அட இதைத்தான் இன்ரேனல் லிங்கிங் எண்டு சொல்லுறவங்க போல இருக்கு என்ன ஒரு அறிவுபூர்வமான லிங்கிங். அதிசயமான புத்தகம் கூட இது.

இதுவே மிகவும் திறன்மிக்கதும் கொஞ்சம் குழப்பமனதுமான நான் கண்ட புத்தகம். இதில் உள்ள ஒவ்வொரு கடினமான சொற்களுக்கும் வெவ்வேறு நிறங்களையுடைய நூல் மூலம் இணைப்புக் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த திறன்மிக்க கருத்து, “Thoughts on Dreams” என்ற புத்தகத்தில் மரியா பிச்சேர் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைப் படிக்கும்போது, இணைப்புகள் சிக்கலாகாதா? உங்கள் கருத்து? 











Monday, March 11, 2013

தொலைபேசி மூலம் கதவு திறக்கலாம்


முன் வாயிலில் உள்ள கதவு மணி தொல்லையாக உள்ளதா? எந்த வேலை செய்துகொண்டு இருக்கும் நிலையிலும், இடையே வேலையை விட்டுவிட்டு கதாவைத் திறந்து வந்தவருக்கு பதில் சொல்வது கடினமான விடயமே. அதே நேரம், உங்களது வீட்டிற்கு யார் யார் வருகிறார்கள் என்பதை வெளி ஊரில் இருந்து அவதானிப்பதும் கடினமே. அதைவிட, குடும்பத்தோடு வெளியே செல்லும் நிலையில், வீட்டிற்கு வருபவர்களின் வருகையை இழந்து விடும் அதே நேரம், அவர்களுக்கு சரியான தகவலைக் கொடுக்க முடியாத நிலையில் இருப்போம். தற்பொழுது இருக்கவே இறுக்கிறது 'Doorbot'. இது எடிசன் ஜூனியர் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது.

பட்டரி மூலம் வைபை ஊடாக உங்களது நவீன தொலைபேசிமூலம் வீட்டு வாசலில் வந்து இருப்பவர் யார் என்பதை நேரடியாகப் பார்க்க முடிவதோடு, அவர்களோடு பேசவும் செய்யலாம். பொதுவான தொலைபேசி அழைப்பு போல் உங்கலது நவீன தொலைபேசியில் தோன்றும் இந்த அழைப்பை மேலும் மெருகூட்ட, 'Lockitron' என்ற சாதனம் இதனுடன் சேர்த்தால், உங்களது நவீன தொலைபெசியாலேயே கதவைத் திறக்கவும் மூடவும் செய்யலாம். பல தொலைபேசி மற்றும் டேபிலட் களில் இலகுவாக மென்பொருளை தரவிறக்கம் செய்து செயற்பட செய்ய முடியும். இந்த தொழிநுட்பத்தை செயல்படுத்த, Christiestreet என்ற இனைய தளத்தில் உதவி கோரப் பட்டுள்ளது.



Sunday, March 10, 2013

Hard Disk ஐ பாதுகாப்பது எப்படி?

 கணினி இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைகளினால் கம்ப்யூட்டர் off ஆனால், அல்லது restart செய்ய சொல்லி, அப்படி restart செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போன்ற பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்துவிடும். அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும். இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கொஞ்சம் கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.
  
Check Disk செய்யும் முறை:
1. My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.
2. அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab-ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் 'Check Now' என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.
3. இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.
4. இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது. எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.
5. இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக்கூடாது. எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள். மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப்படும்.
6. மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ்) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.
 
Hard Disk-ஐ பரமரிப்பது முக்கியமான கடமை. எனவே முதலில் chkdsk (Check Disk)செய்து Hard Disk-ஐ காப்பாற்றுங்கள்.

Friday, March 8, 2013

உற்றுப்பாருங்கள் உலகம் தெரிந்ததா??


இதில் நடுவில் வரும் எழுத்துக்களை  மட்டும்  அது முடியும்வரை  பாருங்கள்.
முடிந்ததும் உடனடியாக உங்கள் அறையில் எங்காவது உடனடியாக பார்வையைத்திருப்புங்கள்
என்ன    தெரிந்தது என்று எழுதுங்கள்




Wednesday, March 6, 2013

சிறுவர்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளம்



0000
இன்றைய காலகட்டத்தில் இணையம் தான் உலகையே ஆட்டிப் படைக்கின்றது, இதில் சிறுவர்களுக்கான பல்வேறு இணையத்தளங்களும் இருக்கின்றன.
Whyville என்னும் இந்த தளம் சிறுவர்களுக்கான சமூக வலைத்தளமாக இயங்குகிறது. இதன் மூலம் உங்கள் குழந்தைகள் பணத்தை நிர்வகிப்பது, சரியான முறையில் உண்பது மற்றும் ஒன்லைன் பாதுகாப்பு போன்ற விடயங்களை கற்றுக் கொள்ளலாம்.
மற்றைய தளங்கள் போலவே சாட்டிங் சேவையும் பாதுகாப்பான முறையிலும் வழங்கப்படுகிறது. இச் சேவையை உபயோகிக்கும் முன் சிறார்கள் சாட்டிங் உரிமம் பெற வேண்டும்.
அதை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. இது தவிர சிறார்கள் தங்களுக்கென முகங்களை வடிவமைத்து உருவாக்கி கொள்வது, பல விளையாட்டு அம்சங்கள் என உள்ளன.
இத்தளம் பாதுகாப்பான முறையில் ஒன்லைனில் பாவிக்கும் அடிப்படை விடயங்களை கற்றுத் தருகிறது.

PostNOTEPAD ஐப் பாவித்து ஒரு FOLDER ஐ LOCK செய்வது எப்படி ? title


ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம்.
notepad-screen
உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும் alt
முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.
ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்
ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil
பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும்.இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும் .
Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
இனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .


Monday, March 4, 2013

ஐபோன் ரூ.5,000 முதல் ரூ.7,500வரை கிசுகிசுக்கள் வெளியாகிறது


கடந்த வாரம் நடந்து முடிந்த சிஇஎஸ் 2013ல் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது படைப்புகளை வெளியிட்டன. பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் கலந்துகொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5S என அழைக்கப்படும் ஐபோன் 6 பற்றிய கிசுகிசு ஏராளமாக வந்துகொண்டே உள்ளன. அவற்றின் மொத்த தொகுப்பை இங்கே வெளியிட்டுள்ளோம்.
உலகம் அழியும்போது இப்படித்தான் இருக்கும்!
அதாவது ஆப்பிள் ஐபோன் 5S வரும் ஜுனுக்குள் வெளியாகுமெனத்தெரிகிறது. அதாவது ஜூன் மாதம் அல்லது மே மாதம் மொபைல் சந்தைகளில் எதிர்பார்க்கலாம். மேலும் இது 6 முதல் 8 வண்ண வேறுபாடுகளிலும் ஒன்றிற்கு மேற்பட்ட வடிவங்களிலும் கிடைக்குமாம்.
இந்த ஐபோன் 5S அதிக தரமுள்ள திரையுடனும், நல்ல கேமராவைகொண்டும் வெளியிடப்படும். மேலும் இதில் ஐஒஸ் 7 இயங்குதளம் இருக்கும்.
வருங்கால தொழில்நுட்பங்கள்!
மேலுமொரு தகவல் என்னவெனில் ஜூன் மாதத்திற்கு மேல் உள்ள கால இடைவெளியில் ஐபோனானது பல்வேறு விலை வித்தியாசங்களில் கிடைக்குமாம். அதிலும் மிகவும் குறைந்த விலைகளில் கிடைக்குமெனத்தெரிகிறது. இந்த குறைந்த விலை போன்கள் இந்தியா மற்றும் சீனா மொபைல் சந்தைகளை மட்டும் குறிவைத்து வெளியிடப்படும் எனத்தெரிகிறது.
விலைகள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை இருக்கலாம் என்கிறது. ப்லூம்பெர்க் இணையதளம் இதை உறுதிசெய்துள்ளது.
iphone5s

உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது தெரியுமா?


நம்மில் சிலர் காலை முதல் இரவு வரை (மறுநாள் காலை வரை ) பேஸ்புக்கிலேயே மூழ்கி கிடக்கிறோம்.
கடந்த மாதம் பங்கு சந்தையில் கால் பதித்த பேஸ்புக் தனது வருமானத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அத்தோடு Privacy விசயங்களிலும் கொஞ்சம் மாற்றங்கள் செய்துள்ளது.
இந்த நிலையில் பேஸ்புக் பயனரிடம் இருந்து எவ்வளவு சம்பாதிக்கிறது என்று அறிவோம் வாருங்கள்.
1. முதலில் https://goprivate.abine.com/ என்ற இந்த தளத்திற்கு செல்லவும்.
2. கீழே உள்ளது போல சில கேள்விகள் இருக்கும் அவற்றுக்கு பதிலளிக்கவும்.
3. இப்போது உங்கள் மூலம் பேஸ்புக் எவ்வளவு சம்பாதிக்கிறது என்று வரும்.
இதில் 116 $ என்பது என் கணக்கின் மூலம் பேஸ்புக் சம்பாதிப்பது. இது பேஸ்புக்கின் சந்தை மதிப்பை பொறுத்து மாறும்.
அருகில் உள்ள 31.54 $ என்பது கடந்த வார சந்தை மதிப்பு.

Friday, March 1, 2013

இன்ற்ரநெற் இல்லாமல் எந்த மொபைலிலும் பேஸ்புக் பார்க்கலாம்.


நீங்க பழைய கைபேசி வகையை சார்ந்த Nokia 1100 போன்ற கைபேசிகளை வைத்திருக்கிறீர்களா?. உங்கள் ஃபோன்ல இணையத்தை பார்க்கும் Browser வசதி இல்லையா?. இல்லை இணைய வசதியே இல்லாத ஊர்ல, அதாவது (EGDE/GPRS/3G) போன்ற வசதி இல்லாத இடத்தில போய் மாட்டிகிட்டிங்களா?.
சரி கவலைய விடுங்க.. இந்த மாதிரி நேரத்திலும் இடத்திலும் நீங்க இருந்தா கூட இப்போ ஃபேஸ்புக்கை பயன்படுத்த முடியும்.
ஆச்சர்யமாய் இருக்கா?. கைபேசியிலிருந்து நீங்கள் இதை பயன்படுத்த, *325# என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும், அது போதும் நீங்க ஃபேஸ்புக் பயன்படுத்த முடியும். கீழே இருக்கிற படங்களை பாருங்க உங்களுக்கே புரியும்.
        
தரவு திட்டம் (Data Plan) இல்லாமல் பேஸ்புக் பயன்படுத்தலாம்.
ஃபேஸ்புக் இந்தியாவில் Fonetwish வுடன் இணைந்து இந்த சேவையை வழங்குகிறது. இதற்க்கு Apps அல்லது இணைய இணைப்பு தேவையில்லை என்பது சிறப்பு.
உங்கள் கைபேசியில் இருந்து *325# தொடர்ப்பு கொண்டு, உங்கள் ஃபேஸ்புக் பயனர் கணக்கு விவரங்களை கொடுத்து இந்த சேவையை பயன்படுத்த முடியும். பேஸ்புக் பல்வேறு அம்சங்களை பெற எண் அடிப்படையில் கட்டளைகளை (Number Based Commands) அனுப்பி உங்கள் நண்பருடன் கலந்துரையாட, ஒருவரை நண்பராக்கி கொள்ள, மேலும் பல ஃபேஸ்புக் சேவைகளை பெற முடிகிறது.
நான் இந்த சேவையை சிறிது நேரம் பயன்படுத்தி பார்த்தேன், இது ஒரு வித்தியாசமான அனுபவமாய் இருந்தது. இந்தியாவில் இந்த சேவை தற்போது ஏர்டெல், ஏர்செல், ஐடியா மற்றும் டாடா டோகோமோ பயனர்களுக்கு கிடைக்கும் என Fonetwish கூறுகிறது.
இதன் மூலம் உங்கள் ஃபேஸ்புக் News Feed ல் உள்ளவற்றை ஒவ்வொன்றாக பார்ப்பதற்க்குள் அலுத்துவிடும். ஆனால் உங்களின் ஃபேஸ்புக்கின் Status ஐ Update செய்ய, நண்பர்களுடன் உரையாட இது மிகவும் பயன்படும்.
இதை பயன்படுத்துவதற்க்கு நாள் ஒன்றிற்க்கு ரூபாய் ஒன்று செலவாகும்.