GMAIL
Smart Mute
குழு மின்னஞ்சல் (Group Mails) என்பது தற்போது சகஜமான ஒன்றாகும் பலரும் பல குழுக்களில் சப்ஸ்க்ரைப் செய்து இருப்பார்கள். ஒரு சில தலைப்புகளில் நமக்கு விருப்பம் இருக்கும் ஒரு சில தலைப்பு மொக்கையாக இருக்கும் ஆனாலும் நமக்கு அவை தொடர்ந்து வந்து எரிச்சலைக் கிளப்பிக்கொண்டு இருக்கும். இவற்றை தடுக்க ஜிமெயில் தரும் ஒரு வசதி smart mute ஆகும். இதை lab பகுதியில் சென்று enable செய்த பிறகு உங்கள் முகப்பு பகுதியில் இந்த வசதி வந்து விடும். பின் பிடிக்காத தலைப்புகளில் அல்லது ஆர்வம் இல்லாத விவாதமாக இருந்தால் இதை mute செய்து விட்டால் அதன் பிறகு வரும் மின்னஞ்சலை உங்களுக்கு அறிவித்து உங்களை டென்ஷன் செய்யாது. திரும்ப வேண்டும் என்கிற போது இதை சரி செய்து கொள்ளலாம்.
facebook
facebook ஐ 500 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள் என்றும் தினமும் 250 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அந்நிறுவனத்தின் CEO Mark Zuckerberg கூறியுள்ளார். சமீபமாக அமெரிக்காவில் உள்ள பில்லியனர் பணக்கரார்கள் தங்களுடைய சொத்தில் குறிப்பிட்ட பணத்தை அறக்கட்டளைகளுக்கு கொடுத்து வருகிறார்கள். அதில் சமீபத்தில் facebook நிறுவனர் Mark Zukerberg US$ 6.9 பில்லியன் பணத்தை அறக்கட்டளைக்கு கொடுத்து இருக்கிறார் கொடுத்ததோடல்லாமல் அதற்கு விளக்கம் இவ்வாறு கொடுத்துள்ளார்..”வயதான காலத்தில் தான் இதைப்போல அனைவரும் செய்கிறார்கள் அவ்வளவு நாள் எதற்கு இதைப்போல செய்ய காத்திருக்க வேண்டும்” என்று எப்பூடி! இந்தியாவில் இதைப்போல விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் பலர் தங்களது உலவியில் முகப்பு பக்கமாக தங்களுக்கு விருப்பமான தளத்தை வைத்து இருந்தாலும் அதில் முன்னணி வகிப்பது கூகிள் ஆகும் தற்போது இந்த முறையை மாற்ற facebook விரும்புகிறது எனவே தன்னுடைய தளத்தை முகப்பு பக்கமாக வைக்க பல வித உத்திகளை பயன்படுத்தி வருகிறது இதன் மூலம் இணைய உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் facebook முதல் இடத்தை பிடிக்க பல்வேறு மார்க்கெட்டிங் தந்திரங்களை கையாண்டு வருகிறது. சமூகத்தளம் என்ற ஒரு வசதியை மட்டும் வைத்துக்கொண்டு கூகிள் உடன் போட்டி போட முடியுமா! என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Linkedin
facebook போல இன்னொரு வளர்ந்து வரும் நிறுவனம் Linkedin என்ற சமூகத்தளமாகும். இதில் நமது பணி பற்றிய தகவல்களை சேமித்து வைத்துக்கொண்டால் தங்களது தேவைக்கேற்ப நிறுவனங்கள் இதில் இருந்து நபர்களை தேர்ந்தெடுத்து தங்கள் நிறுவனத்திற்கு அழைக்கிறார்கள். இது மிகவும் பயனுள்ள தளம் ஆகும். பேஸ்புக் போன்று வீண் பொழுதுபோக்குவதை போல் அல்லாமல் பயனுள்ள பொழுதுபோக்காக அமைகிறது. உலகின் பல்வேறு கம்பனிகள் இதன் மூலம் இணைந்துள்ளது. இதில் தற்போது ஒரு நொடிக்கு ஒருவர் இதில் இணைவதாக கூறப்படுகிறது.
Microsoft
நவம்பர் 20 1985 அன்று துவங்கப்பட்ட மைக்ரோ சாஃப்ட் தற்போது தனது 25 ஆண்டு விழாவை கொண்டாடி இருக்கிறது. பல யன்னல்களைக் (விண்டோஸ்) கடந்து புதிய யுகம் நோக்கி பயணிக்கிறது. எம்முடய வளர்ச்சியில் மைக்ரோசாப்ட் ம் ஒரு முக்கிய காரணம் என்பதால் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Chrome
தற்போதைய உலவிகளில் ஜெட் வேகத்தில் வளர்ச்சியில் சென்று கொண்டு இருப்பது க்ரோம் ஆகும். உலவி பயன்பாட்டில் அதிரடியாக மிக மிகக்குறைந்த நாட்களில் 10% இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது. இது உண்மையில் மிகப்பெரிய சாதனையாகும். க்ரோம் உலவியை நாம் தொடர்ந்து பயன்படுத்துகிறோம் என்ற முறையில் இந்த சாதனைக்கு முழுத்தகுதியானது என்பதில் எமக்கு எந்த சந்தேகமுமில்லை. க்ரோம் தனது அடுத்த வெளியீடான க்ரோம் பதிப்பு 8 ஐ வெளியிட்டுள்ளது.
Opera
பிரபலமான உலவிகளில் ஒன்றான ஓபரா தனது அடுத்த வெளியீடான பதிப்பு 11 வெளியிட்டு இருக்கிறது. இது 150 மில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Chromium OS
பலரும் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த க்ரோம் இயங்குதளம் வெளியிடப்பட்டுள்ளது. இது அடுத்த வருடம் நடுவில் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்த இணையம் அவசியம் என்பதால் இந்தியாவில் இது பிரபலமாக வாய்ப்பு குறைவு காரணம் மோசமான இணைய கட்டமைப்பு. துவக்கமாக இதை acer, samsung போன்ற நிறுவனங்களின் உதவியோடு netbook ல் வெளியிடுகிறார்கள். தற்போது netbook ஐ Tablet PC எனப்படும் சிறிய கணினி ஒன்றுமில்லாமல் செய்து வருகிறது இந்நிலையில் இதற்கு எவ்வாறு வரவேற்பு இருக்கும் என்று தெரியவில்லை. கூகிள் தனது குரோமியம் இயங்குதளத்தை Tablet PC க்களில் வெளியிட்டால் வரவேற்பு அதிகம் இருக்கும்.
Wikileaks
விக்கிலீக்ஸ் பற்றி தான் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அமெரிக்கா வாங்கிய அடி அதிகம் என்பதால் தன்னால் முடிந்த வரை விக்கிலீக்ஸ் தளத்தை முடக்க முயற்சிகள் எடுத்து வருகிறது. இதற்கு கிடைக்கும் உதவிகளையும் தடுத்து வருகிறது. தற்போது Paypal (Visa, Mastercard கூட) என்ற பணம் பட்டுவாடா செய்யும் நிறுவனம் தற்போது விக்கிலீக்ஸ் தளத்திற்கு சேவையை நிறுத்தியுள்ளது இதன் மூலம் விக்கிலீக்ஸ்க்கு உதவி கிடைப்பதை தடுக்கிறார்கள். இவை இல்லாமல் பல முன்னணி நிறுவனங்கள் விக்கிலீக்ஸ் க்கு தரும் சேவையை நிறுத்த மறைமுகமாக மிரட்டப்பட்டு வருகின்றன.
facebook Profile
facebook தற்போது புதுப்புது வசதிகளை கொடுத்து வருகிறது இதன் மூலம் அதன் வளர்ச்சி தற்போது மிக வேகமாக போய்க்கொண்டுள்ளது. தற்போது பயனாளர்களின் profile பகுதியை மிக சிறப்பாக மாற்றியமைத்துள்ளது. இது linkedin நிறுவனத்திற்கு தலைவலியாக வந்துள்ளது.
EVERGREEN BROTHERS
2000ம் ஆண்டில் உருவான நண்பர்களின் கூட்டு நிறுவனம் ஆன EVERGREEN BROTHERS தற்போது தனது 11வருட பயணத்தில் பல்வேறு கிளை நிறுவனங்களை உருவாக்கியும். தானும் வளர்ந்து தன்னுடன் சேர்ந்து பயணிக்கும் நிறுவனங்களையும் வளர்க்கும் ஒரு கட்டமைப்பாக விளங்கி வருகிறது. தகவல் தொழில்நுட்பம், சினிமா, பொழுதுபோக்கு, புகைப்படவியல், விளம்பர தயாரிப்பு,குறும்பட வெளியீடு போன்ற பிரிவுகளில் தொழிற்பட்டுவரும் ஒரு நிறுவனம் ஆகும். இந் நிறுவன நிர்வாகிகள் குழுமம் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இதன் கீழ் இயங்கி வரும் நிறுவனங்களையும் கூட்டு நிறுவனங்களையும் பட்டியல் இடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment