உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

Pages

Saturday, December 25, 2010

ஆன்லைன் இல் வீடியோ டிக்ஸ்னரி புதுமையிலும் புதுமை

டிக்ஸ்னரி பற்றி நமக்கு தெரியும் அது என்ன வீடியோ டிக்ஸ்னரி
என்றால் ஆன்லைன் -ல் நாம் தேடும் வார்த்தைக்கான அர்த்தத்தை
வீடியோவுடன் காட்டுகின்றனர் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


 ஆன்லைன் மூலம் டிக்ஸ்னரி பயன்படுத்தி இருப்போம், ஒவ்வொரு
டிக்ஸ்னரியும் பல சிறப்புகளுடன் இருக்கும் ஆனால் இதைப்போல்
ஒரு டிக்ஸ்னரி இதுவரை வந்ததில்லை என்று கூறும் அளவிறகு
வித்தியாசமாக உள்ளது. அதாவது நாம் தேடும் வார்த்தைக்கான
அர்தத்தை வீடியோவுடன் சொல்கிறது. ஒருவார்த்தை அல்ல 76,000
வார்த்தைகள் மற்றும் 1,20,000 definitions கள் உள்ளது இதைத்தவிர
தினமும் பல வார்த்தைகளுக்காகன வீடியோ பதிவேற்றம்
செய்யப்படுகிறது.

இணையதள முகவரி : http://www.wordia.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படத்தில் காட்டியபடி  Search the
visual Dictionary
என்ற கட்டத்திற்குள் வார்த்தையை கொடுத்து
தேட வேண்டியது தான் அடுத்து வரும் திரையில் வார்த்தைக்கான
அர்த்தமும் அதனுடன் வீடியோவும் வரும்.இதைத்தவிர வார்த்தைக்கான
Games
வசதியும் உள்ளது.தினமும் ஒரு வார்த்தைக்கான வீடியோவை
Latest word
என்ற தலைப்பில் காட்டுகிறது. Top Videos என்பதை
சொடுக்கி பிரபலமான டிக்ஸ்னரி வீடியோவை பார்க்கலாம்.
வழக்கமான டிக்ஸ்னரி பயன்படுத்தும் நமக்கு இந்த ஆன்லைன்
வீடியோ டிக்ஸ்னரி சற்று புதுமையாகவே இருக்கும்

எமது அனைத்து கேள்விகளுக்கும் விரல் நுனியில் பதில் சொல்ல புதிய தளம்.

நம் கேள்வியை தேடு பொறியில் சென்று தேடி கிடைக்கும்
இணையதளங்களை விட அந்த கேள்விக்கு சரியான பதில்
கொடுத்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று என்னும்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.


தேடுபொறியில் சாதாரண கேள்வி கேட்டால் கூட மிகப்பெரிய
அளவிற்கு பதிலும் விளம்பரமும் உள்ள இணையதளங்களை
சேர்த்தே கொடுக்கிறது எந்த பதில் சரியாக இருக்கும் என்று
தேடக்கூட நாம் பல தளங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது
இந்த சுமையை குறைப்பதற்காகக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.snappyfingers.com
இந்ததளத்திற்கு சென்று படத்தில் காட்டியபடி உள்ள கட்டத்திற்குள்
நம் கேள்வியை கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும்
அடுத்து வரும் திரையில் நாம் கேட்ட கேள்விக்கான பதில் கிடைக்கும்
கூடவே பதில் இருக்கும் இணையதளமும் சேர்த்தே கிடைக்கும்.
பதிலுடன் கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்
அந்த தளத்தைச் சொடுக்கி மேலும் பல விபரங்கள் தெரிந்து
கொள்ளலாம். அடிக்கடி நமக்கு எழும் பல கேள்விகளுக்கான
விடை முதலில் தெரிவதும் இத்தளத்தின் சிறப்பு. கண்டிப்பாக
ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவருக்கும் இந்தத்தளம்
பயனுள்ளதாக இருக்கும்



Friday, December 17, 2010

இணையத்தில் தமிழ் இலகுவாக எழுத.



இணையத்தில் தமிழில் எழுதுபவர்கள் தமிழா என்ற நிறுவனத்தின் இ கலப்பை மென்பொருள் பற்றி அறிந்திருப்பீர்கள். அண்மையில் அதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியாகியுள்ளது.


e-Kalappai 3.0
பதிப்பில் Tamil99 , Phonetic, Typewriter, Bamini, Inscript ஆகிய 5 கீபோட்களில் யுனிகோட்டில் டைப் செய்வதற்கு வசதியுள்ளது.

யுனிகோட்டில்
எழுதும்போது F2 விசையை அழுத்துவதன் மூலம் ஆங்கிலம் மற்றும் தமிழுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

கணனியில் நிறுவாமல் பென் டிரைவ்களில் வைத்தே
போர்டபிளாகவும் பயன்படுத்த வசதிசெய்து தந்திருக்கிறார்கள். (டவுண்லோட் பகுதியில் இருக்கும் ஷிப் பைலை எக்ஸ்டிராக் செய்து சேமித்து பயன்படுத்தலாம்
இது ஒரு இலவச மென்பொருளாகும்
. தமிழில் எழுத ஆர்வமுள்ள புதியவர்களும் இந்த மென்பொருளை பயன்படுத்தி பயனுறலாம் 



விரிவாக
இங்கே
http://ezilnila.com/archives/1672

டவுண்லோட் செய்வதற்கு இங்கே
http://code.google.com/p/ekalappai/downloads/list

வீடியோ
விளக்கம் இங்கே
http://vimeo.com/15567315


மேலும்
தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பை இந்த இணைப்பில் காணலாம்.
http://ezilnila.com/archives/810

Monday, December 6, 2010

ஒரு இணையத்தளத்தையே உள்ளங்கையில் எடுத்துச் செல்வது எப்படி?

ஒரு வெப்சைட்டில் உள்ள அனைத்து இணையப்பக்கங்கள் அவற்றின் உள்ளே உள்ள இன்டெர்னல் லிங்குகள் படங்கள், ஆடியோ,வீடியோ அனைத்தையும் அப்படியே ஒரே சொடுக்கில் தரவிறக்கம் செய்யலாம்.அதை இணைய இணைப்பின்றி உலாவலாம்.



இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த இணையத்தளத்தை அப்படியே இறக்கி, யு.எஸ்.பியில் பதிந்து உள்ளங்கையில் எடுத்துச்செல்லலாம்.

Web Zip ஐ  பதிவிறக்கம்  செய்ய! 

http://www.spidersoft.com/webzip/webzip71_setup.exe
 



தப்பித்தவறிக் கூட மவுசால் க்ளிக் பண்ணிடாதீங்க!

மவுஸில் க்ளிக் செய்வது என்பது கணினி யுகத்தில் தவிர்க்க இயலாத செயல். நாம் அடிக்கடி அதைக் கிளிக் செய்தே நமது காரியங்களை ஆற்றிக்கொண்டிருக்கிறோம். இணைய உலகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான இணையத்தளங்களில், நான் கண்ட ஒரு வித்தியாசமான தளத்தை உங்களுக்கு இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.  
ஒரு இணையத்தளத்தில் இறுதி வரை மவுஸ் கிளிக்கைத் தவிர்த்து முழுக்க முழுக்க அனிமேசன்களாலும், புதிய அணுகுமுறையாலும் மனதைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் தளத்தின் வேகமும் அதிரடியாக இருக்கிறது. மீறி இந்தத்தளத்தில் மவுசால் கிளிக் செய்தால் என்ன நடக்கிறது என்பதை ஒருமுறை நீங்களே பாருங்கள்.
தளத்தின் முகவரி : http://www.dontclick.it/

இணைய டிஜிட்டல் நூலகம்

 எல்லாம் டிஜிட்டல் மயமாக மாறிவரும் காலகட்டத்தில் ஒரு பயனுள்ள தளமாக இந்த உலக டிஜிட்டல் நூலகம் விளங்குகிறது.

இணையத்தில் இயங்கும் நூலகங்களில் இது ஒரு வியக்கத்தக்க பயனுள்ள டிஜிட்டல் மீடியா நூலகம். அது என்ன டிஜிட்டல் மீடியா நூலகம் என்று வியப்பாக இருக்கிறதா? ஆம், இதில் உலக சரித்திரத்தின் பதிவுகளை டிஜிட்டல் மீடியாவில் பதிந்து தருகிறது.

நம் வீட்டில் நம் தாத்தா அல்லது அவருடைய தாத்தாவின் அந்தக் காலத்து சிதிலமடைந்த போட்டோக்களைப் பார்க்கும் போது, அப்போதே டிஜிட்டல் மீடியாவாக இருந்தால் சேதம் இல்லாமல் இருந்திருக்குமே என்ற எண்ணம் எழுகிறது. பின் எப்படியாவது அதனைச் சரி செய்து, ஸ்கேன் செய்து நம் கம்ப்யூட்டரில்போட்டு வைக்கிறோம். அதே போல உலகெங்கும் நம் நினைவிற்குச் சிக்காத நாட்களிலிருந்து கிடைத்த காட்சிகள், படங்கள், ஓசைகள், சரித்திர, கலாச்சாரக் குறிப்புகள் ஆகிய அனைத்தையும் டிஜிட்டல் மீடியாக்களாக இந்த ஆன்லைன் நூலகத்தில்பதிவுகளாகக் கிடைக்கின்றன. இந்த நூலகத்திற்கு உங்கள் கம்ப்யூட்டர் வழியே சென்று, உலகின் அனைத்து நாடுகள், கலாச்சாரம், சரித்திரம் குறித்தவற்றைத் தேடிப் பெற்று அறிந்து கொள்ளலாம். மொழிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் உலா வருவதற்கும் பல வழிகள், பிரிவுகள் உள்ளன. இடம், காலம், பொருள்,பொருள் வகை, அமைப்பு நிறுவனங்கள் என உலா வரலாம். ஆங்கிலம் மட்டுமின்றி வேறு பல மொழிகள் மூலமும் தேடலாம். சிறிய திரைப்பட வீடியோக்கள், ஒலிப் பதிவுகள், புகைப்படங்கள் வாரியாகவும் தேடித் தகவல்களைப் பெறலாம்

ஒருமுறை தேடிப் பார்க்கத் தொடங்கினால் நம் முன்னோருக்கு முன்னோரான ஒரு தாத்தாவைச் சந்தித்த சந்தோஷம் கிடைக்கிறது. தமிழ் என்று போட்டு தேடிய போது, வெகு காலத்திற்கு முன் எப்படி யெல்லாம் தமிழ் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியவருகிறது. போட்டோக்களின் கீழே, நூல்களின் முன் அட்டையில் தமிழில் பெயர், குறிப்புகளை அந்தக் காலத்தில் நமக்காக எழுதி வைத்த அந்த பெரியவர் எப்படி இருந்திருப்பார் என்ற சுகமான கற்பனை ஓடுகிறது. அவசியம் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு தளம் இந்த உலக டிஜிட்டல் மீடியா இணையம்

ஒருமுறை விஜயம் செய்து பாருங்கள்:-

http://www.wdl.org/en/ 

Real World Programming

 றியல் வேல்ட் புரோக்கிராம்

என் இனிய நண்பர்களை இந்த றியல் வேல்ட்  புரோக்கிராம் என்ற ஆய்வுக் கட்டுரை மூலம் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்
நண்பர்களே இன்றய கால கட்டத்தில் நாம் நம் பெற்றோரைப் பிரிந்து இருந்தாலும் கூட கணனியை பிரிந்து ஒரு நிமிடம் கூட இருப்பதில்லை அப்படிப்பட்ட கணனி பற்றி நாம் அறிந்து இருப்பது ஒருசில விடயம் மட்டுமே! இந்த உலகில் மனித உயிரினம் எப்படி ஒரு உன்னதமான படைப்போ அதே போல் கணனியும் ஒரு உன்னத படைப்பேயாகும் அது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
முன்னய காலத்தில் அதாவது 2000 இற்கு முற்பட்ட காலப்பகுதியில் கணனியில் எழுதப்பட்ட புரோக்கிராம்கள் ஒரு கணிப்பான் போன்றே எழுதப்பட்டது. உதாரணத்திற்கு ஒரு கடையில் உள்ள பொருட்கள் அதன் விலைப்பட்டியல் போன்றவற்றிகே எழுதப்பட்ட புரோக்கிராம்கள் விஞ்ஞான வளர்ச்சியினால் பார்கோட் ரீடர் உதவி மூலம். அந்த பொருளைக் காட்டிய உடனேயே விலை போன்றவற்றை கணிப்பிடும் வண்ணமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே இனிவரும் காலங்களின் நீங்கள் விரும்பிய பொருளை கடையில் காட்சிப் பெட்டியில் இருந்து எடுத்தவுடனேயே சென்சர் இன் உதவியுடன் உங்கள் பெயரில் பில் எழுதப்பட்டு விடும்.. இத்தகய வளர்ச்சியில் பங்கெடுப்பது தான் இந்த றியல் வேல்ட் புரோக்கிராமிங்..
"ஊரோடு ஒத்துவாழ்வோம்"
  அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் கூறுவார்களே “ஊரோடு ஒத்து வாழ்” அந்த கருத்தைக் கொண்டது தான் இந்த றியல் வேல்ட் புரோக்கிராமிங், உலகத்திற்கு என்ன தேவைப்படுகிறது என அறிந்து அதனை உலகிற்கு வழங்குவது தான் இது. கணனி உலகில் மைக்ரோ சொவ்ட் மற்றும் இணைய உலகில் நாம் அனைவரும் பயன்படுத்தும். Face Book, போன்றன எல்லாம் இவ்வாறே நமக்கு தேவையானவற்றை அறிந்து வழங்குகின்றன அதனால் தான் அவற்றால் எப்பொழுதும் முன்ணனியில் நிக்க முடிகிறது. இன்றய உலகில் இந்த றியல் வேல்ட் புரோக்கிராமிங்கிற்கு பாரிய வரவேற்ப்பு உள்ளது! இத் துறையில் தான் அனைத்து அதி நவீன உயர் தொழில் நுட்ப கருவிகள் உருவாகப்படுகிறது…

மனிதனும் றியல் வேல்ட் புரோக்கிராமிங்கும்.
அனைத்து கணனி சாதனங்களும் மனிதனால் கண்டுபிடிகப்பட்டவையே. கணனி என்பது பற்றி என்ன நினைக்குறீங்க???. நமக்கு எங்கும் எத்துறையிலும் உதவியாக இருக்கும் ஒரு சாதனம். ஆம் இந்த கருத்து உண்மையானது தான், ஆனால் இந்த கணனி எவ்வாறு தொழிற்படுகிறது. நாம் கணனியின் உட் செலுத்தும் அனைத்து Data களும் Binary code. ஆக ரீட் ஆகிறது என்ற ஒரு தப்பான கருத்து எங்கள் அனைவரிடமும் உள்ளது. கணனியினுள் நாம் உட்செலுத்தும் டேட்டா அனைத்தும் On,Off முறையில் தான் சேமிக்கப்படுகிறது On/Off என்பதன் குறிச்சொல்லாகத்தான் 010101010101010  என்னும் Binary code பயன்படுகிறது.
உலகிலேயே ஆம்/இல்லை (yes/no) வினாக்கள் தான் அதிகம். எந்த ஒரு வினாவையும் கேட்டுப்பாருங்கள் அனேகமான வினாவிற்கு பதிலாக ஆம் / இல்லை தான் வரும், இதன் அடிப்படையில் தான் கணனியில் தரவுகள் சேமிக்கப்பட்டு வருகிறது. இதே போல் தான் மனித மூளையிலும் தரவுகள் சேமிக்கப்பட்டு வருகிறது.
கணனிக்கும் மனித மூளைக்கும் என்ன வேறுபாடு என்றால்! கணனியில் புரோக்கிராம் புரோக்கிராமரால் எழுதப்படுகிறது! ஆனால் கடவுளின் உன்னத படைப்பில் ஒன்றான மனித மூளையில் உங்களுக்கான புரோக்கிராம் நீங்கள் வளரும் சூழலை வைத்தே எழுதப்படுகிறது! அன்றாடம் நீங்கள் சிறுவயதில் அறிபவை மற்றும் அனுபங்கள் எல்லாம் கணனி புரோக்கிராம் போன்று. சுயமாகவே மூளையில் அதிர்வுகள் மூலம் புரோக்கிராம் உருவாக்கப்படுகிறது. உங்கள் மூளை எச்சூழலில் எவ்வாறு புரோக்கிராம் பண்ணப்பட்டுள்ளதோ அவ்வாறுதான் நீங்கள் இயங்குவீர்கள்!!

 பயணம் தொடரும்......!!!!!!!!!!!!!


SOFT LIFE

 
 www.softlifelk.webs.com
www.softlifelanka.tk
 இத் தளம் KTK குறூப் ஓவ் கம்பனியின் தகவல் தொழில்நுட்ப்ப பிரிவாகிய SOFT LIFE மென்பொருள் கட்டுமான நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முற்றிலும் சேவை நோக்கத்துடன் தமிழ் மொழியிலான தளம் ஆகும். இத்தளம் மிகவும் பயனுள்ள தளமாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.


மேலும் நாம் இப்போது வலைப்பூவிலும் கால் பதித்திருப்பது எமது நிறுவனத்தின் புதிய முயற்சிகளில் ஒன்றாகும்...
உங்கள் ஆதரவு எப்போதும் எமது நிறுவனத்திற்கு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் எமது பணி தொடர்கிறது.