உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

Pages

Thursday, February 28, 2013

Voice Call,Sim வசதியுள்ள Android Tablet




Smartphone போலவே Tablet வாங்கவும் நிறைய பேர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்கு உகந்த வகையில் பல நிறுவனங்கள் Tablet - களை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவின் Micromax நிறுவனம் இதுவரை பல Tablet களை வெளியிட்டுள்ளது. தற்போது அதன் புதிய வெளியீடு Micromax Funbook P600. Voice Call வசதியுடன் வரும் இந்த Android Tablet விலை 9499  ரூபாய்* என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விபரங்களை பார்ப்போம். 

370 கிராம் எடையுடைய இந்த Tablet கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.0 Ice Cream Sandwich - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 2 MP மெயின் கேமராவை பின்னால் கொண்டுள்ளது. அதே போல முன்னாலும்  ஒரு கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 7 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது.

இது 512 MB RAM, 4 GB ROM மற்றும் 1 GHz Cortex-A5 Dual Core கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 2GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Lithum Polymer வகை பேட்டரியுடன் வருகிறது. 

இவற்றோடு 3G, Wi-Fi. HDMI Port போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே
Micromax Funbook P600 Specifications
Operating SystemAndroid OS 4.0.4 (Ice Cream Sandwich)
Display7.0-inch (480 x 800 pixels) TFT Capacitive Touch screen,16 M Colors
Sim CardYes, Voice call supported
Processor1 GHz Cortex-A5 Dual Core Processor
RAMRAM 512 MB, ROM 4 GB
Internal Memory2 GB
External MemorymicroSD (up to 32GB)
Camera2 MP  Rear Camera, Front camera also available
BatteryLithum Polymer battery. Stand By Time: 224 hrs & Browsing Time: 4 hrs
Features 3G, HDMI, Wi-Fi, Micro USB v2.0


SOFT LIFE Review:

Voice Call Support இருப்பதால் தான் விலை கொஞ்சம் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன். மற்றபடி சாதாரண Tablet தான் இது. கொஞ்சம் விலை குறைவாக இருந்தால் வாங்கலாம். 

* - விலை Update செய்த தேதி 01-03-2013. 

Tuesday, February 26, 2013

GRAPH SEARCH பேஸ்புக்கில் அறிமுகமாகிறது புதிய வசதி தொழில்நுட்பம்



பேஸ்புக் சமுக வலைத்தளம் விரைவில் Graph Search எனும் புதிய பகுதியை தமது பில்லியன் கணக்கிலான பாவனையாளர்களுக்கு அறிமுகப்படுத்த போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.கலிபோர்னியாவின் மென்லோ பார்க்கில் நிருபர்களை சந்தித்த பேஸ்புக் நிறுவனர் சூக்கர்பேர்க் இத்தகவலை வழங்கினார். இப்புதிய வசதி கூகுள் Search Engine க்கு போட்டியாக, கருதப்பட வாய்ப்பிருக்கின்றதா என கேள்வி எழுப்பிய போது, Graph Search வசதி அதனை ஒத்ததல்ல எனக் கூறினார் சூக்கர்பேர்க்.இத்தேடுபொறியில் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் தொடர்புடைய அவர்களுடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை மாத்திரம் இலகுவாக தொகுத்து பெற்றுக்கொள்ளலாம் என அவர் கூறுகிறார். ‘உதாரணமாக எனது பேஸ்புக் நண்பர்களிடையே கலிபோர்னியாவில் வசிப்பவர்கள் யார்? என ஓர் கேள்வியை எழுப்பினால், உடனடியாக அந்நண்பர்களின் பட்டியலை (Graph) தொகுத்து தருகிறது இவ்வசதி’ என்கிறார்.இதே போன்று உங்களது ஆயிரக்கணக்கான பேஸ்புக் நண்பர்களிடமிருந்து ஒரு பொதுவான விருப்பமுடைய நபர்களை சட்டென பிரித்து காட்டச்சொன்னால் இந்த Facebook Graph Search உதவி செய்கிறது.
68682_438521999554830_378958638_n
இதுவரை அமெரிக்காவில் Beta வேர்ஷனாக வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக்கின் இப்புதிய வசதி, இன்னும் சில மாதங்களில் உத்தியோகபூர்வமாக அனைத்து பேஸ்புக் பாவணையாளர்களிடமும் கொண்டுவரப்படவுள்ளது.இவ்வாறு Graph Search Engine இல் காண்பிக்க முடியாத பதில்கள் இருக்குமாயின் மைக்ராசாப்ட்டின் Bing தேடுபொறி மூலம் பதில் தரவிளையும். இந்த புதிய வசதி எந்த விதத்திலும் வழமையான பேஸ்புக் பாவனையாளர்களின் Privacy Setting இல் அத்துமீறல் செய்யாது என உறுதியளித்துள்ள சூக்கர் பேர்க், எனினும் Privacy Setting இல் சில எச்சரிக்கை தகவல்களை தந்து, இந்த Graph Search Engine இல் தனிப்பட்ட உங்களது பேஸ்புக் புரொபைலை இணைப்பதற்கு அனுமதி கேட்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த Graph Search சேவைக்காக பேஸ்புக்கின் பாவனையாளடமிருந்து சுமார் 1 ட்ரில்லியன் இணைப்புக்கள் பொருத்தப்படவிருப்பதாக சூக்கர்பேர்க் சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கின் இப்புதிய வசதி அறிமுகம் இணைய உலகில் இப்போது சூடுபிடித்துள்ளது. பேஸ்புக் ஏதோ ஒரு புதிய பிரமாண்ட வசதியை அறிவிக்க போகிறது என கடந்த சில வாரங்களாக யூகங்கள் வந்திகளாக பரவி வந்தன. ஸ்மார்ட்ஃபோனுக்கு பொருத்தமானதாக முழுமையான ஒரு இணைய தேடுதல் பொறியை அறிமுகப்படுத்தலாம் என சில வதந்திகள் பரவியிருந்தன. எனினும் இறுதியில் அவற்றையெல்லாம் பொய்ப்பித்துள்ளது இன்றைய சூக்கர்பேர்கின் அறிவிப்பு.கடந்த 2012 டிசம்பர் மாதம் பேஸ்புக்கின் இங்கிலாந்து, அமெரிக்க பாவனையாளர்கள் ஆயிரக்கணக்கில் தமது அக்கவுண்டுக்களை Disactivate செய்திருந்தனர்.
இதனால் பேஸ்புக்கின் மீது வெறுப்பு ஆரம்பித்துவிட்டதாக ஊடகங்கள் புரளியை கிளப்பியிருந்தன. ஆனால் மறுமுனையில் இந்தியா, பிரேசில் பொதுமக்களின் பேஸ்புக் பாவணை அதிகரித்துவிட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவித்திருந்தன.இந்தியாவில் இப்போது இணையம் உபயோகிப்பவர்கள் 120 மில்லியனுக்கு அதிகம். இதில் 62 மில்லியன் பாவனையாளர்கள் பேஸ்புக் பாவிக்கிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 1.5 மில்லியன் பேர் புதிதாக பேஸ்புக் உபயோகிக்க தொடங்கியிருந்தார்கள். இந்நிலையில் பேஸ்புக்கின் இப்புதிய சேவை அறிமுகம் அதன் பாவனையாளர்களுக்கு மேலும் உற்சாகம் தரக்கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேஸ்புக்கின் Graph Search Beta பதிப்பை பார்க்க போகிறீர்களா? :
https://www.facebook.com/about/graphsearch

PHOTOSHOP க்கு போட்டியான இலவச முன்னணி மென்பொருட்கள்


Photoshop பற்றி அறியாதவர்கள் எவருமில்லை. Photoshop இன் புதிய Version C7 விரைவில் வெளியாக உள்ளது. Photoshop professional editing தேவைகளுக்கு வெளியாகிறது. இதன் அளவு பெரிதாக இருப்பதோடு , இதன் விலை அனைவருக்கும் இது கிடைப்பதை தடை செய்கிறது. இப்போது Photoshop க்கு போட்டியாக பல மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. எவ்வாறாயினும் இவற்றில் பலவற்றின் வடிவமைப்பு Photoshop போல இல்லை. அத்துடன், இதன் செயற்பாடுகளும் அவ்வளவு திருப்பதியாக இல்லை. இலவசமாக கிடைக்கும் Photoshop இனை வடிவத்திலும் செய்யற்பாட்டிலும் ஒத்த முன்னணி 5மென்பொருட்களை இப்போது காண்க.

GIMP

Photoshop க்கு அடுத்ததாக அனைவராலும் அறியப்பட்ட ஒன்று. ஓரளவு Photoshop இன் இடை முகத்தை கொண்ட மென்பொருள். மிகப்பெரும் tools box இதில் சிறப்பானது. painting , colour correction, cloning, selection என அனைத்துக்கும்  ஏற்றது.
Home Page: www.gimp.org
Download:  Cloud or Direct
Price: Free
Platform: Linux, Windows, Mac

PAINT.NET


அவ்வளவாக பிரபலம் அடையாத இதில் ஏராளமான வசதிகள் உண்டு. மிகச்சிறிய அளவில் உள்ளது இதன் மற்றுமொரு சிறப்பு. சிறப்பான  selection tools,  curves மூலமான கட்டுப்பாடுகள் போன்வை photoshop இல் உள்ளதை போன்ற வசதிகள் ஆகும்.
Home Page: www.getpaint.net
Download:  Cloud or Direct
Price: Free
Platform: Windows

INKSCAPE

மேலே உள்ளவற்றை விட சிறப்பானது. Scalable Vector Graphics (SVG) முறையில் சேமிக்க உதவுதல் இதன் சிறப்பம்சம். CorelDraw  வின் தன்மைகளை ஒத்தது.
Home Page: inkscape.org
Download:  Cloud or Direct
Price: Free
Platform: Linux, Windows, Mac

GIMPHOTO


தொழில்நுட்ப ரீதியில் ஏராளமான வசதிகளை கொண்ட இம் மென்பொருள் சற்று பழையது. இதன் update நீண்ட காலமாக வரவில்லை. Desktop color picker
Enhanced text tool, Dynamic brushes போன்றவை சிறப்பானவை.
Home Page: gimphoto.com
Download:  Cloud or Direct
Price: Free
Platform: Linux, Windows, Mac

FREE ONLINE PHOTO EDITING SERVICES

இணையத்திலும் photos edit செய்ய ஏராளமான இலவச தளங்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்துவதால் பல நன்மைகள் உண்டு. உதாரணமாக தரவிறக்க தேவை இல்லை, பரந்து பட்ட Frame, templates போன்ற online resources  இலவசமாக கிடைத்தல் போன்றவை.
  1. photoshop Express
  2. pixlr.com
  3. www.aviary.com
  4. www.splashup.com
இதை விட Picasa பொதுவாக அறியப்பட்ட இணையத்திலும் கணணியிலும் இயங்க கூடிய கூகிள் தரும் இலவச Photo Editing சேவையாகும்

Tuesday, February 19, 2013

கண்களின் பாதுகாப்பிற்கான மென்பொருள்


உங்கள் கண்களின் பாதுகாப்பிற்கான ( Eyes Relax )மென்பொருள் இதுஆகும்.இது ஒரு அருமையான மென்பொருள். நாம் கணினியில்மணிக்கணக்காக உட்கார்ந்து வேலைபார்ப்போம்.நேரம் போவதேதெரியாது .பாவம் நம் கண்கள் தான் என்ன பாவம் செய்தன.சிறிதுஇடைவெளி கூட விடமால் கொட்ட கொட்ட விழித்து வேலைசெய்வோம். இதை தவிர்க்கவே இந்த மென்பொருள் ஒரு சிறந்தபணியை மேற்கொள்கிறது .அது என்னனென்ன பணிகள் என இனிபார்ப்போம். முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால்செய்து கொள்ளவும்  நீங்கள் கணினியில் பணிபுரியும் போது ஒருகுறிப்பிட்ட நீங்கள் கொடுத்த நேர இடைவெளியில் இடைவேளைஏற்படுத்தி உங்கள் கண்களுக்கு சிறிது ரிலாக்ஸ் தருகிறது .அதாவதுசிறிது நேர இடைவெளியில் கணினி தனது பணியை நிறுத்தி சிலவினாடிகளில் விட்ட இடத்திலிருந்து பணியை தொடர்கிறது .1 ) உங்களுக்கு தேவையான வொர்க் டைம் ,பிரேக் டைம் கொடுக்கவும்.
2 ) பின் கான்பிகர் செட்டிங் மீது கிளிக் செய்து உங்களுக்கு தேவையானமாற்றங்களை ஏற்படுத்தவும்.
இதில் உங்களுக்கு வெறும் டயலாக் பாக்ஸில் இன்டர்வெல் தெரியவேணுமா ,அல்லது கணினி திரை முழுதும் வண்ணங்களில் மாறிஅல்லது திரையில் ஏதாவது படத்தை செட் செய்யவா,அல்லது உங்கள்படங்கள் ஸ்லைடு ஷோ ஆக இடைவெளி வேண்டுமா என தேர்வுசெய்யவும்,முடிந்த வரை கண்ணுக்கு குளிர்ச்சியான படங்களை தேர்வுசெய்தால் கண்கள் ரிலாக்ஸ் அடையும்.
3 )  மேலும் நீங்கள் நீண்ட நேர இடைவெளியும் செட் செய்துகொள்ளலாம்.
மேலும் நம்பர்  ( 4,5 )- ல் உள்ள செட்டிங்கையும் பயன் படுத்திபாருங்கள்.
6 ) பின் HIDE அழுத்தினால் அது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்துகொள்ளும்.நீங்கள் செட்டிங் செய்த நேரம் வரும் போது எச்சரிக்கைஒலி ஏற்படுத்தி சிறப்பான பணியை புரியும்.அந்த ஒலியையும் நமக்குதகுந்த இசை ஒலியை தேர்வு செய்து கொள்ளலாம்.பயன்படுத்திஉங்கள் கருத்தை கூறுங்கள்.நான் மனதுக்கு இதமான முருகன் படத்தைசெட் செய்துள்ளேன்.பார்க்க படம்.இன்டர்வெல் தேவை இல்லையெனில் உடனே கேன்சல் மீது கிளிக்செய்தால் உடனே பணியை தொடரலாம்.இதன் தரவிறக்க முகவரி :- Click Me

Monday, February 18, 2013

Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Tablet அல்லது Tablet PC எனப்படுபவை இப்போது மிகப் பிரபலமான ஒன்று. நிறைய பேருக்கு இவற்றை வாங்கும் ஆர்வம் இருந்தாலும் எதை வாங்குவது என்பதில் ஒரு குழப்பம் இருக்கும். இந்தப் பதிவில் ஒரு Tablet PC வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்களை காணலாம்.

Tablet PC என்றால் என்ன?

இதை தமிழில் கையடக்க கணினி என்று சொல்லலாம். கணினி தரும் வசதிகள் பலவற்றை Mobile Operating System மூலம் உங்களுக்கு இவை தருகின்றன. இதில் வித்தியாசம் என்றால் Size மற்றும் Touch Screen. கணினி, மடிக்கணினி போல அல்லாமல், இவை முழுக்க முழுக்க Touch Screen ஆகவே இருக்கும். Mouse & Keyboard போன்றவற்றின் அவசியம் இருக்காது.

அதாவது ஒரு Smartphone - ஐ விட பெரியது ஆனால் மடிக்கணினியை விட சிறியது.

அவசியம் வாங்க வேண்டுமா?

கண்டிப்பாக தேவை இல்லை. வெறும் பாடல்கள் கேட்க வேண்டும், படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் Smartphone பக்கம் போகலாம், Screen Size தவிர உங்களுக்கு வேறு ஒன்றும் இதில் வித்தியாசம் இல்லை.

ஆனால், கல்வி, தொழில் போன்ற முக்கிய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை கட்டாயம் வாங்கலாம். எங்கே இருந்து வேண்டும் என்றாலும் இயக்க முடியும், அதிக நேரம் Charge இருக்கும் வசதி என்பதால் இது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

எதை வாங்கலாம்?

Smartphone - கள் போலவே இவற்றிலும் பல Operating System கள் உள்ளன. iOS, Android, Blackberry, Windows RT போன்றவை இப்போதைக்கு பிரபலமான சில Operating System - கள் எனவே இதில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யலாம்.

iOS ஆப்பிளின் தயாரிப்பு விலை அதிகம், அதே சமயம் பலனும் அதிகம். கிட்டத்தட்ட அனைத்து iPhone Application களும் இதிலும் இயங்கும் வண்ணம் உருவாக்கப் படுகின்றன.

Android கூகுளின் தயாரிப்பு, மிகக் குறைந்த விலைக்கே கிடைத்தாலும் இதில் போலிகள் பல அதிகம். அதனால் Google Play எந்த நிறுவனங்களை Support செய்கிறதோ அவற்றை வாங்குவதே நல்லது. இல்லை என்றால் உங்களுக்கு Security பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம். அதை அறிய இங்கே செல்லுங்கள்:http://support.google.com/googleplay/bin/answer.py?hl=en&answer=1727131

அத்தோடு இதில் குறைந்த பட்சம் Android 4.0 இருக்கும் Tablet - ஐ வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு கீழ் என்றால் வேண்டாம்.

Blackberry மொபைல் நிறுவனத்தின் தயாரிப்பு, வணிகர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் அமைக்கபட்டு இருக்கும்
Windows RT - இதை Mobile OS என்று சொல்ல முடியாது, கிட்டத்தட்ட கணினி தான் இது. விண்டோஸ் கணினிகளின் அமைப்பை ஒத்த இது புதிய ஒன்று. Microsoft நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இது பல Touch Application களை கணினிகளில் உள்ளது போன்றே தருகின்றது.ஆனால் இதன் இயக்கத்தில் வரும் பிரச்சினைகளால் அதிகம் விமர்சிக்கவும் படுகிறது.

Tablet க்கு முக்கிய தேவைகள்

Smartphone போலவே தான் இவற்றுக்கும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை Processor, RAM, Battery மற்றும் Connectivity.

Prcessor தற்போதைக்கு 1GHz உள்ள ARM Processor ஒன்றை தெரிவு செய்தல் நலம். RAM 1GB அல்லது 2GB இருக்க வேண்டும்.

Battery தான் இதில் மிக மிக முக்கியமான ஒன்று. எவ்வளவு நேரம் Charge தாங்கும் என்பதை விசாரித்து வாங்குதல் நலம். குறைந்த patcham 3000mAH Battery உள்ள Tablet வாங்குதல் நலம்.

Connectivity என்பதில் Bluetooth, Wifi, GPS, GPRS, 3G போன்றவற்றை கவனிக்க வேண்டும்.

Bluetooth நிறைய Tablet - களில் இல்லை, இதை தேவைப் படுபவர்கள் நீங்கள் வாங்கப் போகும் ஒன்றில் அது இருக்கிறதா என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
Wifi தான் Tablet களின் உயிர்நாடி எனவே அது கட்டாயம் இருக்க வேண்டும்.
GPS சில Tablet களில் வருவது இல்லை, ஆனால் இது மிக அவசியமான ஒன்று.
GPRS மற்றும் 3G போன்றவை Sim Support உள்ள Tablet களில் வரும், Sim Support இல்லை என்றால் 3G Dongle Support இருக்கிறதா என்று கேட்டு வாங்கவும். இதன் மூலம் Data Card - ஐ அதில் பயன்படுத்தலாம்.


இவற்றோடு Camera உங்களுக்கு தேவை என்றால் அது முன்னால், பின்னால் இருக்கிறதா, எத்தனை MP என்று பார்த்து வாங்கவும். Tablet களுக்கு 2MP Back Camera இருந்தாலே வாங்கலாம்.

அத்தோடு பெரும்பாலும் Display Size உங்கள் விருப்பத்திற்கு தெரிவு செய்து கொள்ளுங்கள். 7 இன்ச் முதல் கிடைக்கிறது.

இவையே ஒரு Tablet PC வாங்கும் முன்பு மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள். உங்களுக்கு ஏதேனும் முக்கியம் என்று தோன்றினால் கீழே சொல்லுங்கள். 



Saturday, February 16, 2013

SQL (SEVER) சேவரை எப்படி உங்கள் கணணியில் நிறுவுவது?


அனைத்து புரோக்கிராமிங் களுக்கும் தேவையான  SQL சேவரின் 2008 ற்கான பதிப்பை எவ்வாறு கண்ணியில் நிறுவுவது என்பது பற்றிய ஒரு விளக்க கட்டுரை தான் இது.
இதில் ஒருசில இலகு படிமுறை மூல இலகுவாக சேவரை எமது கண்ணியில் நிறுவி விட முடியும். புரோக்கிராமிங்குகளில் திறமை சாலியான பலருக்கும் இந்த SQL SEVER 2008 இன் பதிப்பு சவாலக உள்ளது. சிறிய வகை புரோக்கிராம் களுக்கு SQL SEVER 2008 ஐ பயன்படுத்துவதை விட SQL EXPRESS மூலம் இலகுவாக DATABASE ஐ கையாள முடியும்.

முதலில் SQL சேவர் புரோக்கிராமை தெரிவு செய்யவும்


 நிறுவ வேண்டிய சேவரை தெரிவு செய்யவும்



 சேவருக்கான உரிம கடவுசொல்லை டைப் செய்யவும்




 சேவரில் எந்த எந்த பகுதி தேவை என தேரிவு செய்யவும் முக்கியமாக புரோக்கிராமிங் பயன்பாட்டுக்கு management tools அவசியம் ஆனது தேவைப்படின் அனைத்தையும் தெரிவு செய்து கூட பதிவேற்றலாம்



windows authentication  முறையைத் தெரிவு செய்வது இலகுவானது மீதம் உள்ள படிமுறைகள் வழமையான புரோக்கிராம் நிற்வுவதற்கான படிமுறைகள் தான் இதனை பின்பற்றுவதன் மூல இலகுவாக நிறுவமுடியும்


















SQL சேவரை நிறுவிய பின்னர் கவனத்தில் கொள்ள C#  அல்லத் VB.NET  நிறுவுவீர்களே ஆனால் CUSTOM SETTINGS மூலம் SQL SEVER ஐ தவிர்த்து Install செய்யவும்.