உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

Pages

Monday, February 18, 2013

Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Tablet அல்லது Tablet PC எனப்படுபவை இப்போது மிகப் பிரபலமான ஒன்று. நிறைய பேருக்கு இவற்றை வாங்கும் ஆர்வம் இருந்தாலும் எதை வாங்குவது என்பதில் ஒரு குழப்பம் இருக்கும். இந்தப் பதிவில் ஒரு Tablet PC வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்களை காணலாம்.

Tablet PC என்றால் என்ன?

இதை தமிழில் கையடக்க கணினி என்று சொல்லலாம். கணினி தரும் வசதிகள் பலவற்றை Mobile Operating System மூலம் உங்களுக்கு இவை தருகின்றன. இதில் வித்தியாசம் என்றால் Size மற்றும் Touch Screen. கணினி, மடிக்கணினி போல அல்லாமல், இவை முழுக்க முழுக்க Touch Screen ஆகவே இருக்கும். Mouse & Keyboard போன்றவற்றின் அவசியம் இருக்காது.

அதாவது ஒரு Smartphone - ஐ விட பெரியது ஆனால் மடிக்கணினியை விட சிறியது.

அவசியம் வாங்க வேண்டுமா?

கண்டிப்பாக தேவை இல்லை. வெறும் பாடல்கள் கேட்க வேண்டும், படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் Smartphone பக்கம் போகலாம், Screen Size தவிர உங்களுக்கு வேறு ஒன்றும் இதில் வித்தியாசம் இல்லை.

ஆனால், கல்வி, தொழில் போன்ற முக்கிய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை கட்டாயம் வாங்கலாம். எங்கே இருந்து வேண்டும் என்றாலும் இயக்க முடியும், அதிக நேரம் Charge இருக்கும் வசதி என்பதால் இது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

எதை வாங்கலாம்?

Smartphone - கள் போலவே இவற்றிலும் பல Operating System கள் உள்ளன. iOS, Android, Blackberry, Windows RT போன்றவை இப்போதைக்கு பிரபலமான சில Operating System - கள் எனவே இதில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யலாம்.

iOS ஆப்பிளின் தயாரிப்பு விலை அதிகம், அதே சமயம் பலனும் அதிகம். கிட்டத்தட்ட அனைத்து iPhone Application களும் இதிலும் இயங்கும் வண்ணம் உருவாக்கப் படுகின்றன.

Android கூகுளின் தயாரிப்பு, மிகக் குறைந்த விலைக்கே கிடைத்தாலும் இதில் போலிகள் பல அதிகம். அதனால் Google Play எந்த நிறுவனங்களை Support செய்கிறதோ அவற்றை வாங்குவதே நல்லது. இல்லை என்றால் உங்களுக்கு Security பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம். அதை அறிய இங்கே செல்லுங்கள்:http://support.google.com/googleplay/bin/answer.py?hl=en&answer=1727131

அத்தோடு இதில் குறைந்த பட்சம் Android 4.0 இருக்கும் Tablet - ஐ வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு கீழ் என்றால் வேண்டாம்.

Blackberry மொபைல் நிறுவனத்தின் தயாரிப்பு, வணிகர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் அமைக்கபட்டு இருக்கும்
Windows RT - இதை Mobile OS என்று சொல்ல முடியாது, கிட்டத்தட்ட கணினி தான் இது. விண்டோஸ் கணினிகளின் அமைப்பை ஒத்த இது புதிய ஒன்று. Microsoft நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இது பல Touch Application களை கணினிகளில் உள்ளது போன்றே தருகின்றது.ஆனால் இதன் இயக்கத்தில் வரும் பிரச்சினைகளால் அதிகம் விமர்சிக்கவும் படுகிறது.

Tablet க்கு முக்கிய தேவைகள்

Smartphone போலவே தான் இவற்றுக்கும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை Processor, RAM, Battery மற்றும் Connectivity.

Prcessor தற்போதைக்கு 1GHz உள்ள ARM Processor ஒன்றை தெரிவு செய்தல் நலம். RAM 1GB அல்லது 2GB இருக்க வேண்டும்.

Battery தான் இதில் மிக மிக முக்கியமான ஒன்று. எவ்வளவு நேரம் Charge தாங்கும் என்பதை விசாரித்து வாங்குதல் நலம். குறைந்த patcham 3000mAH Battery உள்ள Tablet வாங்குதல் நலம்.

Connectivity என்பதில் Bluetooth, Wifi, GPS, GPRS, 3G போன்றவற்றை கவனிக்க வேண்டும்.

Bluetooth நிறைய Tablet - களில் இல்லை, இதை தேவைப் படுபவர்கள் நீங்கள் வாங்கப் போகும் ஒன்றில் அது இருக்கிறதா என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
Wifi தான் Tablet களின் உயிர்நாடி எனவே அது கட்டாயம் இருக்க வேண்டும்.
GPS சில Tablet களில் வருவது இல்லை, ஆனால் இது மிக அவசியமான ஒன்று.
GPRS மற்றும் 3G போன்றவை Sim Support உள்ள Tablet களில் வரும், Sim Support இல்லை என்றால் 3G Dongle Support இருக்கிறதா என்று கேட்டு வாங்கவும். இதன் மூலம் Data Card - ஐ அதில் பயன்படுத்தலாம்.


இவற்றோடு Camera உங்களுக்கு தேவை என்றால் அது முன்னால், பின்னால் இருக்கிறதா, எத்தனை MP என்று பார்த்து வாங்கவும். Tablet களுக்கு 2MP Back Camera இருந்தாலே வாங்கலாம்.

அத்தோடு பெரும்பாலும் Display Size உங்கள் விருப்பத்திற்கு தெரிவு செய்து கொள்ளுங்கள். 7 இன்ச் முதல் கிடைக்கிறது.

இவையே ஒரு Tablet PC வாங்கும் முன்பு மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள். உங்களுக்கு ஏதேனும் முக்கியம் என்று தோன்றினால் கீழே சொல்லுங்கள். 



Saturday, February 16, 2013

SQL (SEVER) சேவரை எப்படி உங்கள் கணணியில் நிறுவுவது?


அனைத்து புரோக்கிராமிங் களுக்கும் தேவையான  SQL சேவரின் 2008 ற்கான பதிப்பை எவ்வாறு கண்ணியில் நிறுவுவது என்பது பற்றிய ஒரு விளக்க கட்டுரை தான் இது.
இதில் ஒருசில இலகு படிமுறை மூல இலகுவாக சேவரை எமது கண்ணியில் நிறுவி விட முடியும். புரோக்கிராமிங்குகளில் திறமை சாலியான பலருக்கும் இந்த SQL SEVER 2008 இன் பதிப்பு சவாலக உள்ளது. சிறிய வகை புரோக்கிராம் களுக்கு SQL SEVER 2008 ஐ பயன்படுத்துவதை விட SQL EXPRESS மூலம் இலகுவாக DATABASE ஐ கையாள முடியும்.

முதலில் SQL சேவர் புரோக்கிராமை தெரிவு செய்யவும்


 நிறுவ வேண்டிய சேவரை தெரிவு செய்யவும்



 சேவருக்கான உரிம கடவுசொல்லை டைப் செய்யவும்




 சேவரில் எந்த எந்த பகுதி தேவை என தேரிவு செய்யவும் முக்கியமாக புரோக்கிராமிங் பயன்பாட்டுக்கு management tools அவசியம் ஆனது தேவைப்படின் அனைத்தையும் தெரிவு செய்து கூட பதிவேற்றலாம்



windows authentication  முறையைத் தெரிவு செய்வது இலகுவானது மீதம் உள்ள படிமுறைகள் வழமையான புரோக்கிராம் நிற்வுவதற்கான படிமுறைகள் தான் இதனை பின்பற்றுவதன் மூல இலகுவாக நிறுவமுடியும்


















SQL சேவரை நிறுவிய பின்னர் கவனத்தில் கொள்ள C#  அல்லத் VB.NET  நிறுவுவீர்களே ஆனால் CUSTOM SETTINGS மூலம் SQL SEVER ஐ தவிர்த்து Install செய்யவும்.

Sunday, July 17, 2011

Nokia 1100 மொபைல் வைத்திருக்கிறீர்களா?? வெகுவிரைவில் நீங்களும் லட்சாதிபதி!!

நீங்கள் Nokia 1100 மாடல் வைத்துள்ளீர்களா? அப்படியானால் உங்கள் கைபேசியின் விலை Rs 16,20650/- (US $32,413)  ஆரம்பத்தில் மிகவும் பிரபலமான இந்த Nokia 1100 வகை கைபேசி, பின்நாளில் வந்த கைபேசிகள் Nokia 1100 கைபேசியை பின்னுக்கு தள்ளிவிட்டன. இருந்தாலும் நம் ஊர்களில் இன்னமும் இந்த வகை கைபேசிகள் இருக்கின்றன அப்படி நீங்கள் இந்த Nokia 1100 வைத்திருந்தால் விற்க்க வேண்டாம். மேற்கத்திய நாடுகளில் (Bochum, Germany) தயாரிக்கப்பட்ட Nokia 1100 வின் விலை 16 லட்சம் வரை போகிறது, Hackerகள் இந்த வகை கைபேசிகளை அதிக விலை கொடுத்து வாங்கி அதில் உள்ள மென்பொருள் குறைபாட்டை வைத்து பெரிய அளவிலான கிரிமினல் குற்றங்களை செய்து வருகிறார்கள் என்று ஆங்கில தளங்கள் குறிப்பிட்டுள்ளன.


மேற்க்கத்திய நாடுகளில் இணைய வங்கிக் கணக்கு வைத்திருப்போர் பண பறிமாற்றத்தின் போது TAN(Transaction Authentication Code) என்று சொல்லப்படும் இந்த codeஐ கிரிமினல்கள் கைபற்றுகிறார்கள். Hackerகள் Bochumல் தயாரிக்கப்பட்ட Nokia 1100 கைபேசியில் உள்ள நிரலை மாற்றி அமைத்து அவர்கள்  மற்றவர்களின் கைபேசியின் எண்னை உபயயோக படுத்தலாம். அவ்வாறு செய்யும் போது TAN code கிரிமினல்களின் கையில் கிடைத்துவிடும் அதை வைத்து அவர்கள் மற்றவர்களின் பணத்தை திருட வாய்ப்புகள் அதிகம்.

Friday, March 11, 2011

ஹேக்கிங்கில் (Hack) கற்கவேண்டியவை!!!


ணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும்.
ஹேக்கிங் என்றால் என்ன?
உங்களை அறியாமல் உங்கள் மூலமாகவே அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மின்னஞ்சல், வங்கி மற்றும் பல இணையக் கணக்குகளின் கடவுச்சொல்லை (Password) திருடுவதே ஹேக்கிங் ஆகும்.
எதற்கு இதை செய்கிறார்கள்?
ஒரு சிலர் இதை பொழுதுபோக்காக செய்கிறார்கள், இன்னும் ஒரு சிலர் தங்களுக்கு பிடிக்காதவர்களின் கணக்கை முடக்க செய்கிறார்கள். ஒரு சிலர் பணத்துக்காக செய்கிறார்கள் அதாவது நீங்கள் பணம் கொடுத்தால் அவர்கள் நீங்கள் கூறும் கணக்கை ஹேக் செய்து கொடுத்து விடுவார்கள். இன்னும் ஒரு சிலர் மற்றவர்களின் வங்கிக்கணக்கை ஆட்டையை போட்டு பட்டை நாமம் சாத்தி விடுவார்கள்.
இதை எவ்வாறு தடுப்பது?
நான் கூறப்போவது உங்களை எச்சரிக்கைபடுத்தவே நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாந்தாலும் நமது கணக்கு முடக்கப்பட்டு விடும். எனவே நான் கூறியவற்றை கூடுமானவரை பின்பற்றப்பாருங்கள்.
1. நீங்கள் கூகிள் மின்னஞ்சல் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் கணக்கில் சென்று உங்கள் மின்னஞ்சல் கணக்கை httpsமுறையில் மாற்றிக்கொள்ளுங்கள் காரணம் இது அதிக பாதுகாப்பான ஒன்றாகும். httpபயன்படுத்தினீர்கள் என்றால் உங்கள் கணக்கை எளிதில் முடக்க முடியும். குறிப்பாக நீங்கள் Public Wireless பயன்படுத்தினால். எனவே நீங்கள் முதல் வேலையாக இதை மாற்றி விடுங்கள். மின்னஞ்சல் கணக்கு என்றில்லை வங்கிக்கணக்கு உட்பட எந்த கணக்கில் நுழைந்தாலும் அது https ஆக உள்ளதா என்று உறுதி செய்த பிறகே உள்ளே செல்ல வேண்டும். https உங்கள் தகவல்களை என்க்ரிப்ட் செய்து அனுப்பும்.
2. நீங்கள் எப்போது மின்னஞ்சலை பயன்படுத்த நினைத்தாலும் நீங்களே முகவரியை முழுதும் தட்டச்சு செய்யுங்கள் எடுத்துக்காட்டாக https://gmail.com வேறு ஏதாவது சுட்டி (Link) மூலம் தயவு செய்து போகாதீர்கள். எடுத்துக்காட்டாக www.emaanthavan.com/google.com என்று இருக்கும்   திறந்தாலும் கூகிள் மின்னஞ்சல் கணக்கு முகப்பு பக்கம் போலவே இருக்கும். நீங்கள் கூகிள் கணக்கு என்று நினைத்து உங்கள் பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து செல்வீர்கள் ஆனால் உள்ளே ஒன்றும் இருக்காது. நீங்களும் சரி! எதோ பிரச்சனை என்று மறுபடியும் நேரடியாக www.gmail.com என்று அடித்து சென்று விடுவீர்கள் ஆனால் உங்களுக்குத் தெரியாது நீங்கள் இன்னொருவருக்கு உங்கள் கடவுச்சொல்லை தாரை வார்த்து விட்டீர்கள் என்று.
3. உங்கள் கணினியில் Windows இயங்குதளம் (Operating System) பயன்படுத்துகிறீர்கள் என்றால் Windows update மற்றும் Anti Virus update கண்டிப்பாக செய்ய வேண்டும். இதை தானியங்கியாக அமைத்து விட்டீர்கள் என்றால் அதுவே நீங்கள் இணையத்தை இணைத்தவுடன் Update செய்து விடும். நீங்கள் அவ்வப்போது அது சரியாக செயல்படுகிறதா என்பதை மட்டும் கவனித்தால் போதுமானது. இது நீங்கள் பயன்படுத்துகின்ற உலவிக்கும் பொருந்தும்.
4. உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து வரும் மின்னஞ்சலில் உள்ள சுட்டிகளை தயவு செய்து க்ளிக் செய்ய வேண்டாம் இன்னும் சொல்லப்போனால் உங்களுக்கு சந்தேகம் அளிக்கும் எந்த சுட்டியையும் க்ளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்கள் தகவல்களை எளிதாக சுருட்ட முடியும்.
5. உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள் பற்றி கேட்டு எதுவும் மின்னஞ்சல் வந்தால் நீங்கள் தைரியமாக அதை டெலிட் செய்து விடலாம். எந்த வங்கியும் உங்கள் கணக்கு பற்றிய விவரங்கள் (பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்) கேட்டு மின்னஞ்சல் செய்யாது. 100% நம்பலாம். உங்கள் மின்னஞ்சல் பயனர் கணக்கு பற்றிய விவரங்களைக் கேட்டு வரும் மின்னஞ்சலும் இதே வகையை சேர்ந்ததாகும்.
6. இலவசமாக கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியாத எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாதீர்கள் அதில் Spyware என்ற உங்கள் தகவல்களை திருடும் மென்பொருளையும் இணைத்து விடுவார்கள். இது தெரியாமல் இலவசம் என்று சந்தோசமாக நிறுவினால் உங்கள் கிரெடிட் கார்ட் எண் உட்பட அனைத்தையும் சுட்டு வேட்டு வைத்து விடுவார்கள். நம்ம தான் இலவசம் என்றால் பினாயிலும் குடிப்போமே! உஷாராக இருங்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு தேவையற்ற மென் பொருளை நிறுவுவதை தவிர்க்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நல்லது உங்கள் கணினியின் வேகமும் சிறப்பாக இருக்கும்.
7. Keylogger என்ற ஒரு மென்பொருள் உள்ளது இது மிக மிக அபாயகரமான மென் பொருளாகும். இதன் மூலம் நீங்கள் தட்டச்சு செய்யும் ஒரு எழுத்து விடாமல் அத்தனையையும் நீங்கள் அறியாமல் படிக்க முடியும். எளிமையாக கூறுவதென்றால் சுத்தமாக உங்களை மொட்டை அடிக்கும் மென்பொருளாகும். இது பற்றி சுருக்கமாக கூற முடியாது என்பதால் இது பற்றியும் இதில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது பற்றியும் தனியாக இடுகை விரைவில் எழுதுகிறேன்.
8. எல்லாவற்றையும் விட மிக ஆபத்தான இடம் என்றால் அது பிரவுசிங் சென்டர் தான். காசு கொடுத்து ஆப்பு வாங்கும் இடம், சொந்த செலவில் சூனியம் வைப்பது ஆகும். இங்கே மேற்க்கூறிய என்னவேண்டும் என்றாலும் நடக்கலாம் அல்லது அனைத்துமே நடக்கலாம். எனவே உங்களின் முக்கியமான கணக்குகளை இதைப்போல பிரவுசிங் சென்டர்களில் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிருங்கள். தவிர்க்க முடியவில்லை என்றால் தயவு செய்து Private Browsing முறையை IE, க்ரோம் (ctrl+shift+N) மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் ல் பயன்படுத்தவும். இது உங்கள் தகவல்களை எங்கும் சேமிக்காது. ஆனால் Keylogger மென்பொருள் முறையில் உங்கள் தகவல்களை திருட முடியும். பாதுகாப்பே இல்லாமல் இருப்பதற்கு இந்த முறை கொஞ்சம் பரவாயில்லை என்று கூறலாம் அவ்வளவே.
9. உங்கள் சொந்தக் கணினியாகவே இருந்தாலும் உங்கள் கடவுச்சொல்லை சேமித்து வைக்காதீர்கள். எப்போது உள்ளே நுழைந்தாலும் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல்லை கொடுத்தே செல்லுங்கள் அதுவே பாதுகாப்பானது. உங்கள் உலவியில் உள்ள History,Cookies ஐ சீரான கால இடைவெளியில் நீக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
10. நீங்கள் என்னதான் அனைத்திலும் பக்காவாக இருந்தாலும் உங்கள் கடவுச்சொல் கஷ்டமானதாக இல்லை என்றால் விரல் சொடுக்கும் நேரத்தில் கண்டு பிடித்து விடுவார்கள். நீங்கள் எவ்வளவு சிறப்பான அல்லது எவ்வளவு கேவலமான கடவுச்சொல்லை வைத்து இருக்கிறீர்கள் என்று பின் வரும் தளங்களில் சென்று அறிந்து கொள்ளுங்கள். மொக்கை கடவுச்சொல்லாக இருந்தால் கையோடு மாற்றி விடுங்கள்.
11. அனைத்து கணக்குகளுக்கும் (Gmail, Yahoo, Hotmail, WordPress) ஒரே கடவுச்சொல்லை வைக்கக்கூடாது அப்படி நீங்கள் வைத்தால் ஒரு கணக்கை ஹேக் செய்தால் உங்கள் அனைத்து கணக்குகளும் உங்கள் கையை விட்டுப்போய் விடும். கூகிள் கணக்கை எடுத்துக்கொண்டால் அதில் மின்னஞ்சல், ப்ளாகர், கூகிள் அனலைசிடிக்ஸ், பிகாசா, காலண்டர், ஃபீட் பர்னர், ரீடர், ஆர்குட், கூகிள் சாட், கூகிள் வாய்ஸ், YouTube, Docs என்று அனைத்தும் காலி ஆகி விடும். ஒரு கடவுச்சொல் ஆனால் நீங்கள் இழப்பது எத்தனை பாருங்கள். இவை இல்லாமல் Yahoo!, Hotmail, WordPress என்று பல கணக்குகள் உள்ளன.
12. உங்களுடைய கணக்கின் கடவுச்சொல்லை யாருக்கும் கொடுக்காதீர்கள் அப்படி அவசியம் கொடுக்க வேண்டி வந்தால் வேலை முடிந்தவுடன் உடனே கடவுச்சொல்லை மாற்றி விடுங்கள் அது எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் சரி! இந்த விசயத்தில் யாராக இருந்தாலும் நம்ப வேண்டாம் காரணம் நாளை வேறு ஒருவர் ஹேக் செய்தால் கூட உங்கள் நண்பரை சந்தேகப்பட வேண்டி வரும். இது அனாவசிய பிரச்சனைகளை தரலாம் நட்பை முறிக்கலாம்.
மேற்கூறியவை உங்களுக்கு ஓரளவு இணைய பாதுகாப்பை அளிக்கும் இருப்பினும் இதையும் மீறி ஜாக்கிரதையாக இருப்பது உங்கள் கையில் தான் உள்ளது. நம் கணக்கை யாரும் இது வரை முடக்கவில்லை அதனால் நம் கணக்கு பாதுகாப்பாக உள்ளது என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். ஹேக் செய்பவர்கள் உங்கள் கணக்கை குறி வைக்கவில்லை என்பதே உண்மை. ஹேக் செய்பவர்கள் நினைத்தால் உங்களின் சிறு தவறு கூட அவர்களுக்குப்போதும் உங்கள் கணக்கைமுடித்து விடுவார்கள்.
உங்கள் கணக்கு ஏதாவது உங்கள் கைவிட்டு போனால் மீட்க SOFT LIFE இன் உதவியை நாடுங்கள்.
உங்களின் முன்னேற்றப் பாதையில் என்றும் உங்களுடன் SOFT LIFE

Saturday, February 12, 2011

கணினி வைரஸ் ஐ எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள்



Computer Virus என்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், இதனை நாம் தமிழில் கிருமி நிரல்கள் என்று கூறுகிறோம். இத்தகைய கிருமிநிரல்களும் நாம் கணினியில் பயன்படுத்தும் மற்ற நிரல்கள் (Programs) போன்றவையே. அப்படி இருக்க இதனை ஏன் நாம் கிருமி நிரல்கள் என்று சொல்லவேண்டும்?..சில நிரல்கள் அழிவுப்பணிக்காக எழுதப்படுகின்றன, எப்படி கிருமிகள் நமது உடலில்
புகுந்தால் அது நமது உடலுக்கு உபாதைகளை விளைவிக்கிறதோ அதுபோல இத்தகைய அழிவுப்பணிக்காக எழுதப்பட்ட நிரல்களும் நமது கணினிக்குள் புகுந்தால் அதற்குப் பல உபாதைகளை விளைவிக்கிறது. இங்கு கணினிக்கு உபாதைகள் என்று நான் கூறுவது கணினியில் உள்ள தரவுகளை, மென்பொருள்களை அழிப்பது, அதிகமான இடத்தை நினைவகங்களில் ஆக்கிரமிப்புசெய்து அதன்மூலமாக கணினியின் செயல்பாட்டு வேகத்தை
குறைப்பது, நாம் கணினியில் வேலை செய்யும்போது பல விதமான தொந்தரவுகளைச் செய்வது என்று பட்டியல் நீளும்
இத்தகைய நிரல்களை நாம் கிருமி நிரல்கள் என்று கூறுவதற்கு பல காரணங்கள்
உள்ளன அவையாவது

1. இந்த நிரல்கள் எப்படி கிருமி ஒரு கிருமியிலிருந்து பலவாகப் பல்கிப் பெருகுகிறதோ அதுபோல பல்கிப்பெருகவல்லவை. ஒரு கிருமி நிரல் தானாகவே தன்னைப்போன்ற கிருமிநிரலை உருவாக்கவல்லது இதனை ஆங்கிலத்தில் Self Replication என்று சொல்வதுண்டு.
2. எப்படி கிருமிகள் ஏதாவது ஊடகங்களைப்பயன்படுத்தி பரவுகின்றனவோ, அதுபோல இத்தகைய நிரல்களும் கணினியின் பல ஊடகங்களின் வழியாக ஒரு கணினியில் இருந்து மற்றொன்றுக்கு பரவுகிறது
எடுத்துக்காட்டாக நெகிழ்வட்டுக்கள் (Floppy disk), மற்றும் வலையமைப்புகளின்
மூலம் கோப்புகளை ஒரு கணினியிலிருந்து வேறு கணினிக்கு மாற்றும் போது அதன் வழியே இத்தகைய கிருமிநிரல்களும் அந்த கணினிக்கு பரவிவிடுகின்றன அங்கிருந்து அடுத்த கணினி என்று அதனுடைய பரவல் நடந்துகொண்டே இருக்கும்.
3. மனித உடலில் கிருமி புகுந்ததும் அது அதனுடைய குறிகளை நமக்கு உணர்த்தி நாம் நோய்வய்ப்பட்டுள்ளதை உறுதிசெய்யுமோ அதுபோல இந்த கிருமி நிரல்களும் நமது கணினியில் புகுந்தவுடன் அது தன் செய்யவேண்டிய அழிவுப்பணிகளையும், தொந்தரவு களையும் தந்து அதனுடைய இருப்பை நமக்கு உணர்த்தும்.இதனை ஆங்கிலத்தில் Symptoms of Virus Attack என்று கூறுவது உண்டு.
4. இத்தகைய கிருமிகள் நமது உடலில் புகுந்து விட்டதை அறிந்தும் நாம் அதனை நமது உடலை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் எப்படி நோய் முற்றி நாம் சாகும் நிலைக்கு செல்லுகிறோமோ அதுபோல கிருமிநிரல்களை அப்படியே தொடர விட்டால் நமது கணினியில் உள்ள முக்கிய தகவல்கள் மற்றும் மென்பொருள்கள் ஆகியனவற்றை நாம் இழக்க, (உயிர் போய்விடும்) வெறும் கணினி மட்டும் தான் மிஞ்சும்.
இத்தகைய கிருமி நிரல்கள் ஆரம்பத்தில் ஒரு விளையாட்டுக்காக மென்பொருள்
பொறியாளர்களால் எழுதப்பட்டன. அவர்கள் வலையமைப்பில் உள்ள தம்முடைய
நண்பரின் நிரல்களை அழிப்பதற்கும், விளையாட்டாக அவர்களைத் தொந்தரவு செய்து மகிழ்வதற்குமே எழுதப்பட்டன இத்தகைய அளவுக்கு அவை வளர்ச்சியடைந்து கணினி உலகையே எப்பொழும் அவதிக்குள்ளாக்கிவரும் என்று அவர்கள் அந்தநேரத்தில் நினைத்திருக்கவில்லை!.
ஆரம்பகாலத்தில் வந்த கிருமிநிரல்கள் அதிகம் ஆபத்தானவைகளாக இல்லை அவைகள் நம்மிடம் விளையாடிவிட்டு மறைந்துபோய்விடும். ஜோசி என்னும் கிருமி நிரல் நமது கணினியில் புகுந்தால், அது எப்போதாவது நாம் பிற வேலையாக இருக்கும் போது திரையில் தோன்றி எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல் என்று கட்டளையிடும் அது கூறியவாறு நீங்களும் “Happy Birthday Josi” என்று எழுதினால் பின்னர் மறைந்து விடும். இத்தகைய கிருமி நிரல்கள் நமது கணினிக்கும் அதில் உள்ள மென்பொருள்களுக்கும் எப்பொழுதும் தீங்கு விளைவிப்பவை அல்ல.
ஆனால் சில கிருமிநிரல்கள் மிகவும் ஆபத்தானவை நமது Hard disk ஐயே மொத்தமாக அழித்து விடும் அத்தோடு நமது மொத்த தகவல்களும், மென்பொருள்களும் அழிந்து விடும். இது பெரிய நிறுவனங்களைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய இழப்பாக இருக்கும்
நமது தனிக்கணினியைப்பொருத்தவரையில் நாம் மிகவும் விலைமதிக்க முடியாத
தகவல்கள் எதனையும் அதிகம் கணினியில் வைத்திருக்கப்போவது இல்லை -மென்பொருள்அழிந்துபோய்விட்டாலும் மீண்டும் நாம் அவற்றை ஏற்றிக்கொள்ளலாம் அது சிரமும் இல்லை.
எத்தகைய வகையில் இந்த கிருமி நிரல்கள் செயல்படுகின்றன?
இத்தகைய கிருமிநிரல்களை எழுதும் வல்லுனர்கள் எந்த விதமான முறைகளில் கணினியை அந்நிரல் தாக்கவேண்டும் என்று அதில் எழுதியுள்ளார்களோ அதன்படி அந்த நிரல்கள்செயல்படும் எடுத்துக்காட்டக நான் ஒரு கிருமிநிரலை எழுதுகிறேன். அதில், அந்தநிரல் கோப்புகளை பிரதி எடுக்கும்பொழுது அது கணினியில் இருந்து நெகிழ்தட்டுக்கும், அதிலிருந்து கணினிக்கும் செல்வதற்காக கட்டளைகளை அமைக்கிறேன். அதுமட்டுமல்லாது அந்நிரல், கணினி வினைக்கலனை தனது நினைவகத்தில் ஏற்றியவுடன் செயல்பட்டு அதாவது தன்னைத்தானே கணினியின் இராம் நினைவகத்தில் ஏற்றிக்கொண்டு அந்த கணினியின் தேதியை கவனித்துவருமாறும் கட்டளைகளை அமைக்கிறேன். அவ்வாறு கணினியின்
தேதியைக்கவனித்து வரும் அக்கிருமிநிரல் மே மாதம் 5 ஆம் தேதி கணினியின்
தேதியாக வரும் நேரத்தில் அதில் உள்ள தகவல்களை (format) மொத்தமாக அழிக்கும் கட்டளையைக்கொடுக்கிறேன்.
இதுதான் ஒரு கிருமிநிரல் செய்யும் வேலை. இங்கு நான் கணினியின் தேதியை கவனித்து அதில் நான் கொடுக்கும் தேதி வந்தால் அது தனது வேலையைச் செய்யக் கட்டளையிட்டிருப்பது போல பல வல்லுனர்கள் பலவிதமாக கட்டளையிடுகின்றனர்.
இத்தகைய கிருமிநிரல்கள் அதை எழுதும் வல்லுனரைப்பொருத்து வேறு வேறு
விதமாக அமைகின்றன, வெவ்வேறு வழிகளில் செயல்படுகின்றன.
இத்தகைய கிருமிநிரல்களை நாம் பொதுவாக இரண்டுவகையாகப்பிரிக்கிறோம் அவை
1. (File Virus) கோப்புகளைத்தாக்கும் கிருமிகள்
2. BootSector
மற்றும் Partition Table கிருமிகள்
இவற்றில் கோப்புகளைத்தாக்கும் கிருமிகள், நிரல்களையும் தகவல் கோப்புகளையும் தாக்கி அழிக்கின்றன.இன்னும் நமது கணினியில் பயன்படுத்தும் நெகிழ்வட்டு (floppy) மற்றும் வண்தட்டு (Hard disk) போன்றவட்டில் நாம் பதிந்துவைத்துள்ள கோப்புகளின் சரியான முகவரி, மற்றும் அந்த hard disk எத்தனையாகப்பிரிக்கப்பட்டுள்ளது அந்த ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு கொள்ளளவு போன்ற தகவல்கள் இந்த Boot Sector மற்றும் Partition table போன்றவற்றில் உள்ளன. இவைகளைக் கிருமி நிரல்கள் தாக்குவதால் நாம் அந்த Hard diskல் உள்ள மொத்த சேமிப்புகளையும் இழந்துவிடுவோம்.
தற்காலத்தில் பல புதிய வகைக்கிருமி நிரல்கள் பரவுகின்றன. அவை மேற்கூறிய வகையில் செயல்படுவதோடு, இணையத்தின் வாயிலாக Credit Card Numbers கள் மற்றும் கடவுசொற்கள் (Passwords) போன்றவற்றை கவர்ந்து செல்வதற்கும் எழுதப்படுகின்றன.
ஒருவகை கிருமி நிரல்களை நாம் த்ரோசான் குதிரைகள்என்று கூறுகிறோம் இவை கிருமிநிரல்களை ஒவ்வொருகணினிக்கும் கொண்டு செல்லும் வேலையைச்செய்கின்றன இதில் எடுத்துச்செல்லப்படும் கிருமிநிரல்கள் அந்தந்த கணினிகளில் தங்கி அவர் அக்கணினியில் செய்யும் வேலைகளைக் கவனித்துவருகின்றன அவர் எப்போதாவது Credit card Number களைத்தரும்போது அவற்றைக் குறிப்பெடுத்துக்கொள்கின்றன சில சமயங்களில் இணைய வங்கியத்தில் பயன்படுத்தும் கடவுச்சீட்டு களையும் எடுத்துவைத்துக்கொள்கின்றன
பின்னர் அவைகளத் தனது எஜமானனுக்கு (Owner of that virus) இணையத்தின்
வாயிலாக அனுப்பி விடுகின்றன.
கிருமிநிரல்களை நமது கணினியில் நுளைந்து விடாமல் தடுப்பது எப்படி?

சில முனெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். அவைகளாவன
1. பிறரிடமிருந்து வாங்கிப்பயன்படுத்தும் Floppy disk, CD போன்றவைகள் முறையாகசோதித்த பின்னரே உபயோகிக்கவேண்டும்.(முடிந்த அளவுக்கு அவைகளைத்தவிர்க்க வேண்டும்.)
2. வேண்டாத விளையாட்டு மென்கலன்களை (Software) இலவசமாகக் கிடைக்கிறதே என்று இணையத்தில் இருந்து இறக்கிக்கொள்வதோ அல்லது நண்பர்களிடம் இருந்து வாங்கி உபயோகிப்பதோ கூடாது.
3. முடிந்த அளவுக்கு கணினியை அடிக்கடி கிருமிச்சோதிப்புக்கு உட்படுத்தவேண்டும்.
4. மின் அஞ்சலில் வரும் இணைப்புகளை அனுப்பியவர் தமக்கு வேண்டியவரா இல்லாத பட்சத்தில் கவனமுடன் கையாள வேண்டும். இவைகள் பெரும்பாலும் கிருமி நிரல் களைத்தாங்கி வரப்பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் இத்தகைய கிருமிநிரல்களை அழிப்பதற்கு அல்லது தடை செய்வதற்கு என்றுகிருமி அழிப்பான்கள் கிடைக்கின்றன. இந்த கிருமி அழிப்பான்களை நாம் நமது கணினியில் பதிந்து வைத்துக்கொண்டு அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனாலும் இங்கு பல விசயங்களை நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். அவைகளாவன
எல்லா கிருமிநிரல்களையும் எல்லா கிருமிஅழிப்பான்களும் (Antivirus Programs)
அழித்துவிடுவதில்லை காரனம் ஏற்கனவே வந்த ஒரு கிருமிநிரலுக்குத்தான் அதை
அழிக்ககூடிய நிரல்களை எழுதமுடியும். இன்று புதிதாக வரும் கிருமிநிரல்களுக்கு
நாளைதான் மருந்து கண்டுபிடிக்க முடியும். அதற்கு காரணம் ஒவ்வொரு கிருமி
எழுத்தாளர்களும் புதுப்புதுவிதமான முறைகளைக்கடைபிடிப்பதால் தான். அந்தமுறைகளைநன்கு ஆராய்ந்து அந்த புதிய கிருமி எவ்வாறு செயல்படுகிறது என்பனை பகுத்தாய்ந்துதான் அதற்கு அழிப்பான்கள் (vaccines) எழுதப்படுகின்றன.
ஆதலால் நேற்றைய கிருமி அழிப்பான்கள் நாளய கிருமிகளை அழிக்கப்போவதில்லைஎனவே அடிக்கடி உங்களது கிருமிஅழிப்பான் மென்கலன்களை புதுப்பித்துக்கொண்டிருக்க வேண்டும்.
இன்னுமொரு விசயம் இந்த கிருமி அழிப்பான் மென்கலன்களை எழுதுபவர்கள்
பல கிருமிநிரல்களை புதிதுபுதிதாக உலவவிடுகிறார்கள். அதன்பின் அதற்கான
அழிப்பானைதயார்செய்து விற்பனை செய்துவிடுகிறார்கள். அந்த சமயத்தில் வேறு
புதிய கிருமிகளை வெளியே அனுப்புகின்றனார்.
ஒரு கிருமியை எழுதியவருக்கு அது எவ்வாறு செயல்படும் என்பது தெரிந்துவிடுவதால் அதனை அழிக்க எழிதில் அழிப்பனை உருவாக்க முடியும். அதேசமயத்தில் ஒரு புதிய கிருமிநிரலை எடுத்துக்கொண்டு அது எவ்வாறெல்லாம் தாக்குகிறது, பரவுகிறது எனபதை நன்கு ஆய்ந்து அதனை அழிப்பதற்கு, தடுப்பதற்கும் நிரல்களை உருவாக்குவது கடினமான பணி.
 உங்களின் முன்னேற்றப் பாதையில் என்றும் உங்களுடன் SOFT LIFE