உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

Pages

Monday, January 17, 2011

IP Address” என்றால் என்ன? தில்லு முல்லுக்களின் அடித்தளம் IP Address

                                              
ஐபி முகவரிகள் என்பது இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் கணினிகளை
அடையாளம் கண்டு தொடர்புகொள்ள ஒவ்வொரு கணினிக்கும் தரப்படும்
எண்களாலான முகவரிஎடு. “195.194.234.345″
IP எனபது INTERNET PROTOCOL என்பதின் சுருக்கமாகும்.

இதுபற்றி எனது முதல் கணினிக்கட்டுரையிலே மேலோட்டமாக தெரிவித்திருக்கிறேன்
இணையம் என்னும் வலையமைப்பில் மிக அதிக என்னிக்கையிலான கணினிகள்
இணைக்கப்பட்டுள்ளன, இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள கணினிகள் அனைத்தும்
தங்களுக்கென ஒரு IP Addressஐக் கொண்டுள்ளன, இத்தகைய IP Addressஐப்
பயன்படுத்தியே தங்களை பிற கணினிகளோடு இணைத்து தகவல் பரிமாற்றத்தை
நிகழ்த்த முடிகிறது. இவை தனிச்சீர்மை பெற்றவை அதாவது ஒரு IP Address,
இரண்டு கணினிகள் கொண்டிருக்கமுடியாது ஒரு கணினிக்கு ஒரு முகவரி மட்டுமே இருக்கும்.

இணையத்தில் பல பரிமாரிக்கணினிகள் (server) நிறுவப்பட்டுள்ளன அவைகளுக்கு
என்று தனியான நிரந்தர IP Address கள் கொடுக்கப்பட்டு இருக்கும். இவை
இருபத்து நான்கு மணி நேரமும் தகவல் பரிமாற்ற வேலையைச்செய்து கொண்டிருக்கும்.
இத்தகைய கணினிகளின் IP Address கள் எப்பொழுதும் மாறாதவை. அதுபோல
Internet Service Provider (ISP) என்னும், இணைய இணைப்பை பொதுமக்களுக்கு
வழங்குபவர்களது கணினியும் இவ்வாறே தனக்கொண தனியானதொரு IP Addressஐக் கொண்டிருக்கும்.

IP முகவரிகளின் அமைப்பைப்பார்த்தோமெனில் அவை வெறும் எண்களால் ஆனவை ஆனால் அவை நான்கு பிரிவுகளில் மூன்று எண்களைக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு மூன்று எண்களுக்கும் இடையில் ஒரு புள்ளி கொடுக்கப்பட்டிருக்கும்.
அதாவது 000.000.000.000 என்ற வடிவத்தில் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும்
எடுத்துக்காட்டாக அமீரகத்தில் உள்ள பரிமாரிக்கணினியின் IP Addressஆவது
194.170.1.6 மற்றும் 194.170.1.7 ஆகும். இவை என்றும் மாறாதவை. இவற்றின்
மூலமே இங்குள்ள பொதுமக்களுக்கு இணைய இணைப்பு வழங்கப்படுகிறது.
இவ்வாறே ஒவ்வொரு நாட்டிலும் இணைய இணைப்பு வழங்குபவருடைய பரிமாரிக் கணினியின் மூலம் அந்நாட்டில் உள்ள மக்களுக்கு இணைய இணைப்பு வழங்கப்படும்.

இவ்வாறு நாம் இத்தகைய பரிமாரிக்கணினியில் இணைக்கப்பட்டிருந்தாலும்
அந்த இணைப்பு இருபத்து நான்கு மணி நேரமும் அப்படியே இருக்கப்போவது இல்லை நாம் விரும்பிய நேரங்களில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப்பயன்படுத்தி அவ்வப்பொழுது நமது கணினியை இணையத்தில் இணைத்துக்கொள்கிறோம். அவ்வாறு இணைத்துக்கொள்ளும் பொழுது மட்டுமே நமது கணினி இணையத்தில் இணைந்திருக்கிறது. இவ்வாறு இணைந்திருக்கும் பொழுது நமக்கு என்று ஒரு IP Address இருந்தால் தான் நம்மால் பிற கணினிகளுடன் உறவாட முடியும்.
எனவே ஒவ்வொரு முறையும் நாம் இணையத்தில் நமது கணினியை இணைத்துக் கொள்ளும்பொழுது நமக்கு இணைப்பைத்தரும் பரிமாரிக்கணினி ஒரு IP Address ஐயும் தருகிறது. இந்த IP Address நிலையானது அல்ல. நாம் இணையத்தொடர்பைத் துண்டித்துக்கொண்டால் அத்துடன் அந்த முகவரியும் பயனிழந்துவிடும்.

ஆக ஒவ்வொரு முறையும் நாம் இணையத்தில் இணையும் பொழுது நம்மை
இணைக்கும் பரிமாரிக்கணினிகள் ஒவ்வொரு முறையும் ஒரு IP Address உருவாக்கி நமது கணினிக்குத்தருகின்றன. அந்த முகவரியைப் பயன்படுத்தியே நாம் இணையத்தில் தற்காலிகமாக உலாவருகின்றோம். இவை ஆங்கிலத்தில் Randomly generated IP Address என்று சொல்லப்படுவது உண்டு.

இவ்வாறு ஏதாவது ஒரு IP Address ஐ உருவாக்கும் பொழுது அந்த பரிமாரிக்கணினி தன்னுடைய் நிலையான முகவரியை மையமாகவைத்து அதனை உருவாக்குவதுதான் இங்கு சிறப்பம்சம். எடுத்துக்காட்டாக அமீரகத்தில் என்னுடைய கணினியை இணையத்தில் இணைக்கிறேன் என்றால் என்னுடைய கணினிக்கு IP Address ஒதுக்கும்பொழுது அந்த சமயத்தில் அதாவது நான் இணைய இணைப்புக்குள் வரும் சமயத்தில்யாருக்கும் ஒதுக்காத எண்ணாகவும், அதேசமயத்தில் அதனுடைய நிலையான எண்ணின் முதல் பகுதியை மையமாக வைத்தே அது உருவாக்கப்படும்.
எடுத்துக்காட்டாக எனது பரிமாரியின் IP Address – 195.229.24.46 என்று கொள்க
எனக்கு ஒதுக்கும் எண்ணானது ஒவ்வொருமுறையும் 195 உடன் துவங்கும் எண்ணாகவே இருக்கும். இதனை வலையமைப்பு எண் என்று கூறுவர் இது சில நாடுகளுக்கு அல்லது ஒரு பெரிய வலையமைப்புக்குச்சொந்தமாக(இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கிற) இருக்கும்.

நாம் மடல்கள் எழுதும்பொழுதும், இணையத்தில் உலாவரும்பொழுதும் நமக்கென்று தரப்பட்டிருகிற ஐபி முகவரிகளைக்கொண்டே தொடர்புகொள்ளுகிறோம். அதனால் நாம் அனுப்பும் மடல்கள் இந்த ஐபி முகவரிகளை கொண்டு எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை அறிந்துகொள்ளமுடியும். இதிலும் நான் ஏற்கனவே கூறியதுபோல இத்தகைய முகவரிகள் அவ்வப்பொழுது உருவாக்கப்படுவதும், இணையத்தில் இருந்து வெளியேரும்பொழுது அழிக்கப்பட்டுவிடுவதுமாக இருப்பதால் நாம் எழுதும் மடல்களை வைத்து அவை எங்கிருந்து அதாவது எந்த நாடு, இணையத்தின் எந்த வலையமைப்பில் அதாவது யார் வழங்கிய இணைய இணைப்பில் (VSNL, Sathyam infoway, Emirates Internet) இருந்து எழுதுகிறோம்
என்பதை எளிதில் அறிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் இன்னார் தான் எழுதினார் என்பதை அறிந்துகொள்ள முடியாது. அவ்வாறு அறிந்துகொள்வதற்கு அந்த பரிமாரியானது எந்த சமயத்தில் யார் யார் எந்த ஐபி முகவரிகளைப் பயன்படுத்தியிருந்தனர் என்பதை சேமித்து வைத்திருக்குமாயின் அதிலிருந்து அறிந்துகொள்ளமுடியும்.

உங்களின் முன்னேறப் பாதையில் என்றும் உங்களுடன் SOFT LIFE

Sunday, January 16, 2011

கைகளினுள் உலக இன்டர்நெட்.

உலக அளவில் இணைக்கப்பட்ட பல கம்ப்யூட்டர்களை நாம் இன்டர்நெட் என அழைக்கிறோம். ஆனால் இமைப்பொழுதில் எப்படி எங்கோ ஒரு மூலையில் உள்ள கம்ப்யூட்டர் சர்வரில் உள்ள தகவல்கள் நம் கம்ப்யூட்டரை வந்தடைகின்றன? இன்டர்நெட்டை முதலில் பயன்படுத்தும் அனைவரின் மனதிலும் இந்த சந்தேகம், வியப்பு எழுவது இயற்கையே. ஒரு சிலர் மேலும் துருவி ஆய்வு செய்து, நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்கின்றனர். சிலரோ அதுதான் இன்டர்நெட் என்று கிடைக்கும் தகவல்களைப் பற்றிய சுவராஸ்யத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். இங்கு அந்த இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம். நம் கைகளுக்குள் உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள தகவல்கள், படங்கள், வீடியோக்கள் எப்படி நம் இல்லத்தில் ஒரு அறையில் உள்ள கம்ப்யூட்டருக்குள் வருகிறது என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டரை இயக்கி, இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து, பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் இன்டர் நெட்எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், சபாரி, குரோம், – என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனை கிளையண்ட்என அழைக்கிறோம். தற்போதைக்கு வாடிக்கையாளர்என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியேஅனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்என்னும் அதி வேக வழியில் செல்கிறது. இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை உபசரிப்பவர்என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.
நாம் ஓர் இணையதளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது. இதற்கு புரோட்டோகால் (Protocol)  என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட் டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர்கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வைபி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi)  எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி ஐ.பி. பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.
இன்டர்நெட்டில் இணைக்கப் படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 விலிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாக www.yahoo.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும். இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது, உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது. முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஓர் ஐ.எஸ்.பி., ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால், அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன. இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது. ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்ட ரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். டி.சி.பி. (Transmission Control Protocol) என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின்ச் செயல்பாடு. ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.
அதென்ன தகவல் பாக்கெட்?
இன்டர்நெட் என்பது பாக்கெட் ஸ்விட்ச்டு நெட் வொர்க்என அழைக்கப் படுகிறது. இதற்கு மாறான நெட்வொர்க் சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்என அழைக்கப்படுகிறது. சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்கில் இணைப்பு ஏற்படுத்துகையில் அந்த இணைப்பை மற்றவர்கள் பயன் படுத்த முடியாது. ஆனால் பாக்கெட் ஸ்விட்ச்டு நெட்வொர்க் கைப் பலர் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பலர் கேட்கும் தகவல்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இவை அதனதன் சேரும் இடத்தைச் சேர்ந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு கேட்பவரிடம் தரப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட் தகவலிலும் ஏறத்தாழ 1500 கேரக்டர்கள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஹெடர்கள் அமைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இந்த ஹெடர்களில் இந்த பாக்கெட்கள் எப்படி இணைக்கப்பட வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் இவை இணைக்கப்படும். ஒரு எடுத்துககாட்டைப் பார்ப்போம். பழைய காலத்து அகலமான திறப்பு கொண்ட கடைகளில் அகலமான கதவு இருந்தால் அதனை திறந்து வைத்தால் அதிக இடம் பிடிக்கும் என்பதால் சிறு சிறு பலகைகளை, மேலும் கீழும் அவற்றைக் கொள்வதற்கான சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி செருகி பின் ஒரு பெரிய இரும்பு பாளத்தில் இணைத்து பூட்டு போடுவார்கள். காலையில் இதனைத் திறந்தவுடன் இந்த பலகைகளைக் கழற்றி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்திடுவார்கள். மீண்டும் கடையைப் பூட்டுகையில் சரியாக வைப்பதற்காக கதவில் எண் அல்லது வேறு குறியீடுகளை அமைத்திருப்பார்கள். இதே போல் தான் சிறு சிறு பொட்டலங்களில் தகவல்கள் செலுத்தப்படுகின்றன. தேவை எனக் கேட்ட கம்ப்யூட்டரை அடைந்தவுடன் அவை ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுகின்றன.
ஒவ்வொரு ஹெடரிலும் செக்சம் (Checksum)  எனப்படும் ஒரு எண் தரப்படும். இந்த எண் மூலம் வரவேண்டிய தகவல் சிந்தாமல் சிதறாமல் வந்து விட்டதா என்று அறியப்பட்டு இணைக்கப்படும். இந்த வேலையை டி.சி.பி. வழிமுறை செயல்படுத்துகிறது. இப்போது முதல் செயலுக்கு வருவோம். நீங்கள் சொற்களில் டைப் செய்திடும் முகவரி எந்த இடத்தில் எண்களாகக் கம்ப்யூட்டருக்கு ஏற்றபடி மாறுகிறது? நீங்கள் டைப் செய்த முகவரியை வைத்துக் கொண்டு உங்கள் ஐ.எஸ்.பி. சர்வர், டொமைன் நேம் சர்வர் (Domain Name Server DNS)  என்ற ஒன்றை நாடுகிறது. இந்த சர்வரே நீங்கள் தந்த முகவரியின் பெயரின் அடிப்படையில் தேடுதலைச் சுருக்கித் தேடி முகவரிக்கான எண் தொகுப்பை ஐ.எஸ்.பிக்கு வழங்குகிறது. பின் அந்த எண் முகவரியை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நெட்டில் தேடல் தொடங்கி குறிப்பிட்ட சர்வரை அடைகிறது. பின் முன்பு கூறியபடி தகவல்கள் கிடைக்கின்றன.

உங்களின் முன்னேறப் பாதையில் என்றும் உங்களுடன் SOFT LIFE.
இப்பதிவு முற்றிலும் KTK Group Of Company & Soft Life  க்கு சொந்தமானதாகும். 

Thursday, January 13, 2011

ஒருபக்கத்தில் இணையத்தளத்தை உருவாக்குங்கள்.


About .me  என்னைப்பற்றி என்ற இணையத்தளத்தில் உங்களுடைய ஒரு முழுப்பக்க புகைப்படத்துடன் மேலும் சில விபரங்களையும்  சேர்த்து உங்களுக்கென்ற ஒரு பக்க இணையப்பக்கத்தை அழகாக உருவாக்கலாம்.
இன்னும் பொதுப்பாவனைக்கென அறிமுகப்படுத்தப்படாத போதும் பரீச்சார்த்தமாக இயங்கி வருகிறது about .me. நீங்களும் உங்களுடைய பெயரைத் தேர்வு செய்வதற்கு விரைவாக பதிவு செய்துகொண்டால் அதே பெயர்களை உங்களுக்கென்றே ரிசேவ் செய்து வைப்பதாக கூறுகிறார்கள் இவர்கள்.

உடனடியாக சென்று உங்களுக்கு என இணையத்தில் ஒரு பக்கத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இணையத்தள முகவரி http://about.me

உங்களின் முன்னேறப் பாதையில் என்றும் உங்களுடன் SOFT LIFE.
இப்பதிவு முற்றிலும் KTK Group Of Company & Soft Life  க்கு சொந்தமானதாகும்.

அதிவேகமாக இணையத்தளங்களில் இருந்து தானாகவே பைல்களை டவுண்லோட் செய்யும் டூல்.

பெரிய பைல்களை (திரைப்படங்கள், மென்பொருட்கள் போன்றவைதான்) Megaupload மற்றும் Rapidshare, போன்ற இணையத்தளங்களில் இருந்து டவுன்லோட் செய்வீர்கள்.
இது போன்ற தளங்களில் நேரடியாக இலவசமாக டவுண்லோட் செய்யும் போது சிறிய நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
ஒன்று அல்லது இரண்டு டவுண்லோட்கள் என்றால் பருவாயில்லை. ஆனால் சில நேரங்களில் 100 எம்.பி அளவில் பத்து பைல்கள் வரை டவுண்லோட் செய்ய வேண்டியிருக்கும்.
அதன் போது ஒவ்வொரு பைலுக்கும் காத்திருந்து டவுண்லோட் செய்வதை விட MDownloader என்ற டூலை பயன்படுத்தி இலகுவாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
MDownloader
டவுண்லோட் செய்து நிறுவிவிட்டு எங்கே பைல்கள் சேமிக்க வேண்டுமென்பதை கொடுத்துவிட்டு,
நீங்கள் டவுண்லோட் செய்ய விரும்பும் அனைத்து பைல்களின் யூ.ஆர்.எல்லை சேர்த்தால் போதும், மற்றைய வேலைகளை இந்த டூலே பார்த்துக்கொள்ளும்.
இந்த டூலினால் ராபிட்சேர் மற்றும் ஏனைய பிரபல ஹோஸ்டிங்க் தளங்ளின் பைல்களையும் காத்திருக்கும் நேரம் மற்றும் பாதுகாப்பு குறியீடு போன்றவற்றை தானாகவே கொடுத்து இலகுவாக டவுண்லோட் செய்ய முடியும்.

இந்த டூலை பயன்படுத்திய பின்னர் அது பற்றிய அனுபவங்களை இங்கே பகிருங்கள்.

டவுண்லோட் செய்ய 
http://mdownloader.codeplex.com/
அப்டேட் : விண்டோஸ் எக்ஸ்பி அல்லது அதற்கு கீழ்ப்பட்ட விண்டோஸ் பயன்படுத்துபவர்களாயின் இந்த டூலை நிறுவ, Microsoft .NET Framework 3.5 Service Pack 1 இன்ஸ்டோல் செய்திருக்க வேண்டும். கீழுள்ள இணைப்பில் டவுண்லோட் செய்துகொள்ளலாம்.
அப்டேட்: Hotfile போன்ற சில ஹோஸ்டிங்க் தளங்களிலிருந்து டவுண்லோட் செய்யும் போது பாதுகாப்புகுறியீட்டை நீங்களே கொடுக்க வேண்டும் இதற்குரிய விண்டோ Mdownloader இல் வலப்பக்கத்தில் காட்டப்படும்.
உங்களின் முன்னேறப் பாதையில் என்றும் உங்களுடன் SOFT LIFE.
இப்பதிவு முற்றிலும் KTK Group Of Company & Soft Life க்கு சொந்தமானதாகும்.


Sunday, January 9, 2011

ஆங்கிலம் உங்களுக்கு ஒரு பிரச்சனையா!! உடனடி தீர்வு தரும் தளம்.

ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டுமானால் அதற்கான ஆங்கில
புத்தகஙகளை வாங்கி படித்த காலமெல்லாம் மாறி இப்போது
பிரபலமானவர்களின் வாழ்க்கை அனுபவத்தையே நமக்கு
பாடமாக சொல்லிக்கொடுத்து நமக்கு இருக்கும் ஆங்கில அறிவை
மேலும் வளர்க்கின்றனர் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


ஆங்கிலப்பத்திரிகை வாங்கி படியுங்கள் உங்களுக்கு ஆங்கில அறிவு
வளரும் என்று சொல்லும் அதே டெக்னிக் தான் ஆனால் சற்று
வித்தியாசமாக ஒரு புதுமையை இங்கு கையாண்டுள்ளனர்.
பிரபலமானவர்களின் வாழ்க்கை அனுபவத்தை எளிய ஆங்கிலத்தில்
ஆங்கிலம் கற்பவர்களுக்கு புரியும்படி மாற்றியுள்ளனர். இது மட்டும்
இல்லாமல் விளையாட்டு, பொழுதுபோக்கு,மொபைல் அப்ளிகேசன்
என பலதுறை வழியாகவும் நமக்கு ஆங்கிலத்தை வளர்க்க  நமக்கு
இந்தத்தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://voxy.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் நம் இமெயில் முகவரியை கொடுத்து
தினமும் ஆங்கில வார்த்தையையும், எளிய ஆங்கிலத்தில்
பிரபலமானவர்களின் அனுபவக்கதைகளையும் பெறலாம்.
இந்ததளத்தில் Stories , Life Skills, Games , Mobile App போன்றவறில்
எதன் மூலம் ஆங்கிலம் கற்றுக்கொள்ள விருப்பமோ அதன் மூலம்
கற்றுக்கொள்ளலாம். இதைத்தவிர குவிஸ் , வார்த்தை பேங்க்
போன்றவற்றின் மூலமும் எளிதாக கற்றுக்கொள்ளலாம். ஆங்கிலம்
கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்ததளம் பயனுள்ளதாக
இருக்கும்.

உங்களின் முன்னேறப் பாதையில் என்றும் உங்களுடன் SOFT LIFE.
இப்பதிவு முற்றிலும் KTK Group Of Company & Soft Life க்கு சொந்தமானதாகும்.

Sunday, January 2, 2011

SOFT LIFE இன் இணைய உலா 2011


GMAIL
Smart Mute

குழு மின்னஞ்சல் (Group Mails) என்பது தற்போது சகஜமான ஒன்றாகும் பலரும் பல குழுக்களில் சப்ஸ்க்ரைப் செய்து இருப்பார்கள். ஒரு சில தலைப்புகளில் நமக்கு விருப்பம் இருக்கும் ஒரு சில தலைப்பு மொக்கையாக இருக்கும் ஆனாலும் நமக்கு அவை தொடர்ந்து வந்து எரிச்சலைக் கிளப்பிக்கொண்டு இருக்கும். இவற்றை தடுக்க ஜிமெயில் தரும் ஒரு வசதி smart mute ஆகும். இதை lab பகுதியில் சென்று enable செய்த பிறகு உங்கள் முகப்பு பகுதியில் இந்த வசதி வந்து விடும். பின் பிடிக்காத தலைப்புகளில் அல்லது ஆர்வம் இல்லாத விவாதமாக இருந்தால் இதை mute செய்து விட்டால் அதன் பிறகு வரும் மின்னஞ்சலை உங்களுக்கு அறிவித்து உங்களை டென்ஷன் செய்யாது. திரும்ப வேண்டும் என்கிற போது இதை சரி செய்து கொள்ளலாம்.

facebook

facebook 500 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள் என்றும் தினமும் 250 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அந்நிறுவனத்தின் CEO Mark Zuckerberg கூறியுள்ளார். சமீபமாக அமெரிக்காவில் உள்ள பில்லியனர் பணக்கரார்கள் தங்களுடைய சொத்தில் குறிப்பிட்ட பணத்தை அறக்கட்டளைகளுக்கு கொடுத்து வருகிறார்கள். அதில் சமீபத்தில் facebook நிறுவனர் Mark Zukerberg US$ 6.9 பில்லியன் பணத்தை அறக்கட்டளைக்கு கொடுத்து இருக்கிறார் கொடுத்ததோடல்லாமல் அதற்கு விளக்கம் இவ்வாறு கொடுத்துள்ளார்..வயதான காலத்தில் தான் இதைப்போல அனைவரும் செய்கிறார்கள் அவ்வளவு நாள் எதற்கு இதைப்போல செய்ய காத்திருக்க வேண்டும்என்று எப்பூடி! இந்தியாவில் இதைப்போல விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் பலர் தங்களது உலவியில் முகப்பு பக்கமாக தங்களுக்கு விருப்பமான தளத்தை வைத்து இருந்தாலும் அதில் முன்னணி வகிப்பது கூகிள் ஆகும் தற்போது இந்த முறையை மாற்ற facebook விரும்புகிறது எனவே தன்னுடைய தளத்தை முகப்பு பக்கமாக வைக்க பல வித உத்திகளை பயன்படுத்தி வருகிறது இதன் மூலம் இணைய உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் facebook முதல் இடத்தை பிடிக்க பல்வேறு மார்க்கெட்டிங் தந்திரங்களை கையாண்டு வருகிறது. சமூகத்தளம் என்ற ஒரு வசதியை மட்டும் வைத்துக்கொண்டு கூகிள் உடன் போட்டி போட முடியுமா! என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Linkedin

facebook போல இன்னொரு வளர்ந்து வரும் நிறுவனம் Linkedin என்ற சமூகத்தளமாகும். இதில் நமது பணி பற்றிய தகவல்களை சேமித்து வைத்துக்கொண்டால் தங்களது தேவைக்கேற்ப நிறுவனங்கள் இதில் இருந்து நபர்களை தேர்ந்தெடுத்து தங்கள் நிறுவனத்திற்கு அழைக்கிறார்கள். இது மிகவும் பயனுள்ள தளம் ஆகும். பேஸ்புக் போன்று வீண் பொழுதுபோக்குவதை போல் அல்லாமல் பயனுள்ள பொழுதுபோக்காக அமைகிறது. உலகின் பல்வேறு கம்பனிகள் இதன் மூலம் இணைந்துள்ளது. இதில் தற்போது ஒரு நொடிக்கு ஒருவர் இதில் இணைவதாக கூறப்படுகிறது.
Microsoft

நவம்பர் 20 1985 அன்று துவங்கப்பட்ட மைக்ரோ சாஃப்ட் தற்போது தனது 25 ஆண்டு விழாவை கொண்டாடி இருக்கிறது. பல யன்னல்களைக் (விண்டோஸ்) கடந்து புதிய யுகம் நோக்கி பயணிக்கிறது.ம்முடய வளர்ச்சியில் மைக்ரோசாப்ட் ம் ஒரு முக்கிய காரணம் என்பதால் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Chrome
தற்போதைய உலவிகளில் ஜெட் வேகத்தில் வளர்ச்சியில் சென்று கொண்டு இருப்பது க்ரோம் ஆகும். உலவி பயன்பாட்டில் அதிரடியாக மிக மிகக்குறைந்த நாட்களில் 10% இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது. இது உண்மையில் மிகப்பெரிய சாதனையாகும். க்ரோம் உலவியை நாம் தொடர்ந்து பயன்படுத்துகிறோம் என்ற முறையில் இந்த சாதனைக்கு முழுத்தகுதியானது என்பதில் எமக்கு எந்த சந்தேகமுமில்லை. க்ரோம் தனது அடுத்த வெளியீடான க்ரோம் பதிப்பு 8 ஐ வெளியிட்டுள்ளது.

Opera

பிரபலமான உலவிகளில் ஒன்றான ஓபரா தனது அடுத்த வெளியீடான பதிப்பு 11 வெளியிட்டு இருக்கிறது. இது 150 மில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Chromium OS

பலரும் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த க்ரோம் இயங்குதளம் வெளியிடப்பட்டுள்ளது. இது அடுத்த வருடம் நடுவில் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்த இணையம் அவசியம் என்பதால் இந்தியாவில் இது பிரபலமாக வாய்ப்பு குறைவு காரணம் மோசமான இணைய கட்டமைப்பு. துவக்கமாக இதை acer, samsung போன்ற நிறுவனங்களின் உதவியோடு netbook ல் வெளியிடுகிறார்கள். தற்போது netbook Tablet PC எனப்படும் சிறிய கணினி ஒன்றுமில்லாமல் செய்து வருகிறது இந்நிலையில் இதற்கு எவ்வாறு வரவேற்பு இருக்கும் என்று தெரியவில்லை. கூகிள் தனது குரோமியம் இயங்குதளத்தை Tablet PC க்களில் வெளியிட்டால் வரவேற்பு அதிகம் இருக்கும்.
Wikileaks

விக்கிலீக்ஸ் பற்றி தான் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அமெரிக்கா வாங்கிய அடி அதிகம் என்பதால் தன்னால் முடிந்த வரை விக்கிலீக்ஸ் தளத்தை முடக்க முயற்சிகள் எடுத்து வருகிறது. இதற்கு கிடைக்கும் உதவிகளையும் தடுத்து வருகிறது. தற்போது Paypal (Visa, Mastercard கூட) என்ற பணம் பட்டுவாடா செய்யும் நிறுவனம் தற்போது விக்கிலீக்ஸ் தளத்திற்கு சேவையை நிறுத்தியுள்ளது இதன் மூலம் விக்கிலீக்ஸ்க்கு உதவி கிடைப்பதை தடுக்கிறார்கள். இவை இல்லாமல் பல முன்னணி நிறுவனங்கள் விக்கிலீக்ஸ் க்கு தரும் சேவையை நிறுத்த மறைமுகமாக மிரட்டப்பட்டு வருகின்றன.

facebook Profile

facebook தற்போது புதுப்புது வசதிகளை கொடுத்து வருகிறது இதன் மூலம் அதன் வளர்ச்சி தற்போது மிக வேகமாக போய்க்கொண்டுள்ளது. தற்போது பயனாளர்களின் profile பகுதியை மிக சிறப்பாக மாற்றியமைத்துள்ளது. இது linkedin நிறுவனத்திற்கு தலைவலியாக வந்துள்ளது.



EVERGREEN BROTHERS

2000ம் ஆண்டில் உருவான நண்பர்களின் கூட்டு நிறுவனம் ஆன EVERGREEN BROTHERS தற்போது தனது 11வருட பயணத்தில் பல்வேறு கிளை நிறுவனங்களை உருவாக்கியும். தானும் வளர்ந்து தன்னுடன் சேர்ந்து பயணிக்கும் நிறுவனங்களையும் வளர்க்கும் ஒரு கட்டமைப்பாக விளங்கி வருகிறது. தகவல் தொழில்நுட்பம், சினிமா, பொழுதுபோக்கு, புகைப்படவியல், விளம்பர தயாரிப்பு,குறும்பட வெளியீடு போன்ற பிரிவுகளில் தொழிற்பட்டுவரும் ஒரு நிறுவனம் ஆகும். இந் நிறுவன நிர்வாகிகள் குழுமம் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இதன் கீழ் இயங்கி வரும் நிறுவனங்களையும் கூட்டு நிறுவனங்களையும் பட்டியல் இடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

SOFT LIFE நிறுவனம் தனது இணைய உலா 2011 இன் பதிவுடன் தனது இவ் வருடத்திற்கான திரைகடல் ஓடி அறிவியல் தேடும் பணியினை இனிதே ஆரம்பிக்கின்றது.

Saturday, January 1, 2011

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

SOFT LIFE மென்பொருள் கட்டுமான நிறுவனத்தின் வலைப்பூவில் பயணிக்கும் மற்றும் பார்வையிடும் அனைத்து நண்பர்களுக்கும், மற்றும் அனைத்து என் இனிய நண்பர்களுக்கும் 2011ம் வருடம் இனிய வருடமாக அமைய SOFT LIFE மற்றும் K.T.K குறூப் ஒவ் கம்பனியின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


வாழ்த்துச் செய்திகள்
எவர்க்கிறீன் பிரதேர்ஸ் இன் ஸ்தாபகரும் தமிழ் பொழுதுபோக்கு வலைப்பூவின் உரிமையாளரும் ஆன கு.கிருத்திகன் அவர்களின் வாழ்த்துச் செய்தி


எனது நண்பனின் வலைப்பூ மற்றும் SOFT LIFE நிறுவனத்தின் சேவைகள் பற்றியும் அறிந்தேன். நாம் கல்விகற்கும் காலகட்டத்தின் எம் அனைவராலும் சேர்ந்து ஒரு விளையாட்டாக  உருவாக்கப்பட்ட EVERGREEN BROTHERS மற்றும் KTK GROUP OF COMPANY. தற்போது தனது பாதையில் பெரு வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகிறது.எமது ஒற்றுமையும் விடா முயற்சியுமே இந்த வெற்றிக்கு காரணமாக அமைகிறது.இந்த இனிய புதுவருட திருநாளில் நண்பனின் வெற்றிப் பயணம் தொடர எனது நல்வாழ்த்துக்கள்.

EVERGREEN BROTHERS இன் முதல்வர் ஹ.சஞ்சீவன் அவர்களின் வாழ்த்துச் செய்தி.


திருத்தணியின் பிளாக்கருக்கு நான் பலமுறை விஜயம் செய்துள்ளேன் ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய தகவலுடன் வெளிவரும் பதிவுகள் மாணவர் மத்தியில் மிகவும் பயன் உள்ளதக அமைகிறது.மேலும் இவன் பணி தொடர எனது வாழ்த்துக்கள். MANY MANY HAPPY NEW YEAR THIRU.    

தமிழமுதம் வலைப்பூவின் ஸ்தாபகரும் உரிமையாளரும் ஆன அரசபிள்ளை அரவிந்தனின் வாழ்த்துச் செய்தி.

நேற்று மாலை திரு எனக்கு ஒரு மசேச் அனுப்பி இருந்தான் ஒரு புது வருட வாழ்த்துச் செய்தி அனுப்பு பிளக்கர்ல போடனும் எண்டு. சரி பயபுள்ள கேக்குறனே நாம வாழ்த்தாம விடுறது சரியில்லை தானே.. இணைய உலகில் இப்போது அனைவரும் வலைப்பதிவு இடுகிறார்கள். ஆனால் THE SOFT LIFE இன் பதிவுகள் சுடச் சுட இன்ரநெட் மென்பொருள் செய்திகள் அதுல வேற மாஜிக் என பல்வேறு வகையான தகவல்களை வழங்கி வளர்ந்து வரும் ஒரு தளமாகும். இதன் வளர்ச்சி தொடர எனது வாழ்த்துக்கள்.   
எனது வாழ்த்துச் செய்தி.

என் இனிய நண்பர்களுக்கு எனது புது வருட நல்வாழ்த்துக்கள். மேலும்  நான் கேட்டவுடனேயே வாழ்த்துச் செய்தி அனுப்பிய எனது நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.இணைய உலகில் எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் எந்த ஒரு தகவலையும் காமடியாகவும் கருத்துடனும் சொல்லும் தளமாக தமிழ் பொழுது போக்க்கு தளமும் எந்த விடயத்தையும் ஒரு வேகத்துடன் உணர்ச்சி பூர்வமாக சொல்லும் தளமாக தமிழமுதம் தளமும். எனது பங்கிற்கு அறிவியல் சார் தகவல்களை இலகுவாக் சொல்லும் தளமாக இது அமைந்துள்ளது.என எதிர்பார்கிறேன். நவரசங்களை உள்ளடக்கிய மூன்று தளங்கள்


ஆக இவை அமைகிறது. மேலும் பல தகவல்களை தரும் தளமாக இவை அமையும் என இந்த புதுவருடத்தில் உறுதியளிக்கின்றோம்.
மீண்டும் என் இனிய நண்பர்களுக்கு எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்.
தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசியெடுக்கும்,
திரைகடல் ஓடி அறிவியல் தேடு.