உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

Pages

Monday, January 27, 2014

ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்குகளை கையாள..


வழக்கமாக நம்மில் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட Google கணக்குகளை வைத்திருப்போம் (ஜிமெயில் உட்பட). பல பதிவர்கள் தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்க்காக ஒரு ஜிமெயில் கணக்கும், ப்ளாக்கிற்காக ஒரு ஜிமெயில் கணக்கும் வைத்திருப்பது வாடிக்கை. ஆனால் இரண்டு ஜிமெயில் கணக்கை ஒரே உலாவியில் திறக்க இயலாது என்பதனால் இரண்டு உலாவிகளில் வெவ்வேறு ஜிமெயில் கணக்குகளை திறந்து வைக்க வேண்டிய நிலை இருந்திருக்கலாம் (மட்டுறுத்தப்பட்ட பின்னூட்டங்களை பப்ளிஷ் செய்யவும் அதே சமயம் உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சலைப் பார்க்கவும்). 

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒரே உலாவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்குகளை கையாளுவது எப்படி என்று பார்க்கலாம். ஒவ்வொரு முறை நீங்கள் உங்கள் கூகுள் கணக்கில் நுழைந்த பிறகும், வலது மேற்புறத்தில் உங்கள் லாகின் விவரம் இருப்பதை கவனிக்கலாம்.


முதலில் http://www.google.com/accounts பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கு Personal Settings என்ற பகுதியில் Multiple sign-in என்ற வரிக்கு நேராக edit என்ற லிங்க்கில் க்ளிக் செய்யுங்கள். Save பொத்தானை அழுத்துங்கள்.

அடுத்து திறக்கும் திரையில், On - Use multiple Google Accounts in the same web browser. ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். பிறகு கீழே உள்ள ஒவ்வொரு check box ஐயும்  (limitations குறித்த விவரங்கள்) தேர்வு செய்து கொண்டு (ஒரு சில கூகுள் பயன்பாடுகளை தவிர அவசியமான பயன்பாடுகள் Multiple sign-in ஐ ஏற்றுக்கொள்ளும்) Save பொத்தானை அழுத்துங்கள்.


அடுத்து, மேலே இந்த விவரங்கள் சேமிக்கப்பட்டதற்கான அறிவிப்பை கவனிக்கலாம். அதன் அருகே உள்ள Back லின்க்கை க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுது வலது புறமுள்ள உங்கள் லாகின் விவரத்தை க்ளிக் செய்தால் Sign in to another account என்ற புதிய வசதி வந்திருப்பதை பாருங்கள். அதனை க்ளிக் செய்து உங்கள் மற்றொரு கணக்கிலும் நுழைந்துக் கொள்ள இயலும்.

இவ்வாறு ஒரே உலாவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்குகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பென்டிரைவில் கோப்புகள் எல்லாம் ஐகானாக மாறிவிட்டிருந்தால்...


பென் டிரைவில் உள்ள கோப்புகள் மற்றும் போல்டர்கள் வைரஸ்களின் பாதிப்பு காரணமாக சிலநேரம் ஐகான்களாக மாறிவிடுகின்றன. அந்த மாதிரி உள்ள கோப்புகளை திறக்க முயற்சித்தாலும் திறக்காது. இதனால் அதில் உள்ள தகவல்கள் அழிந்துவிடவில்லை. தற்போதைக்கு காட்டும் போது ஐகானாக இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது?

1. Start - > Run செல்லவும்
2. அதில் Cmd என்று தட்டச்சிடவும்.
3. பின்னர் வரும் கமாண்ட் விண்டோவில் கீழ்க்கண்ட வரியை
அடித்து எண்டர் தட்டவும்.

attrib -h -r -s /s /d X:\*.*

இதில் X என்பது உங்கள் பென் டிரைவின் எழுத்தைக்குறிக்கும்.

4. இப்போது உங்கள் கோப்புகளும் போல்டர்களும் மீட்கப்பட்டிருக்கும்.

இறுதியாக உங்கள் கணிணியை Malwarebytes மென்பொருள் கொண்டு
Full scan செய்து கணினியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

ஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை தடை செய்வது எப்படி?


Block unwanted mails in gmailதற்போதைய இணைய உலகில் மின்னஞ்சல் சேவை என்பது பலருக்கும் அவசியமான ஒன்றாகிவிட்டது. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கிறார்கள். மின்னஞ்சல் வைத்திருப்போருக்கு இருக்கும் பெரிய தொல்லை தங்களது நண்பர்களிடமிருந்து வருவதை விட விளம்பரங்கள் அடங்கிய மின்னஞ்சல்கள், Spam என்று சொல்லக்கூடிய குப்பை மின்னஞ்சல்களும் வருவதே. இந்த மாதிரி குப்பை மின்னஞ்சல்கள் அனுப்பும் நிறுவனங்கள் இணையத்தில் அங்கங்கே வெளியிடப்பட்டிருக்கும் நமது மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்து மொத்தமாக அனுப்புகின்றன.

மேலும் நமது மின்னஞ்சல் முகவரிகளை புதியவர்களுக்கு தெரியாத்தனமாக கொடுத்திருப்போம். தொல்லை செய்வதற்கு என இருக்கும் சிலர், பழகிய நண்பர்கள் கூட தேவையில்லாத ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பிவைப்பர். ஜிமெயில் கணக்கில் (Gmail Account ) குறிப்பிட்ட நபரின் மின்னஞ்சலையும் குறிப்பிட்ட தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களையும் எப்படி தடை செய்வது என்று பார்ப்போம்.

1. ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் வலது மேல் ஒரத்தில் Create a Filter என்று இருக்கிறதா எனப்பாருங்கள். இல்லாவிட்டால் Settings -> Filters செல்லவும்.

Block unwanted mails in gmailBlock unwanted mails in gmail
2. பின்னர் From என்ற பெட்டியில் உங்களுக்கு வேண்டாத நபரின் மின்னஞ்சலை அடிக்கவும்.குறிப்பிட்ட தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களைத் தடுக்க “@amazon.com” இந்த மாதிரி கொடுக்கவும்.

Block unwanted mails in gmailஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களைத்தடுக்க ஒவ்வொன்றுக்கும் இடையில் | குறியீடைக்கொடுக்கவும்.
(எ.கா) mail1@example.com | mail2@example.com

3. பின்னர் Next step என்பதைக் கிளிக் செய்யுங்கள். இதில் மின்னஞ்சல்களை என்ன செய்ய வேண்டும் எனக்குறிப்பிட வேண்டும்.

Block unwanted mails in gmail
இதில் Delete it என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். மேலும் வலது ஒரத்தில் உள்ள Also apply Filter to _ conversations below என்பதையும் டிக் செய்யவும். இதனால் ஏற்கனவே வந்த மின்னஞ்சல்களும் தானாகவே அழிந்துவிடும். பின்னர் Create Filter என்பதை கிளிக் செய்து உறுதிசெய்யவும்.

4. இதில் உள்ள இன்னொரு வசதி என்னவென்றால் குறிப்பிட்டவரின் மின்னஞ்சல்களை அழிக்க வேண்டாம்; அவற்றை ஒரு தொகுப்பாக போட்டு அதற்கு பெயரிட்டுக்கொள்ள Skip the inbox( Archive it) என்பதை தேர்வு செய்து Apply the label பகுதியில் வேண்டிய பெயரை கொடுத்துக்கொள்ளவும். இவை மொத்தமாக குறிப்பிட்ட பெயரில் சேமிக்கப்பப்பட்டிருக்கும்.

Block unwanted mails in gmail
5. இன்னும் சில மின்னஞ்சல்களை இதே மாதிரி தடை செய்ய
“ | “ குறியீடைக்கொடுக்கலாம். அல்லது மீண்டும் Create a Filter கிளிக் செய்து
தடை செய்யலாம்.