உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

Pages

Wednesday, December 11, 2013

கூகிளின் பிறந்தநாள் பரிசு - Birthday Doodles

இன்று காலையில் எப்போதும் போல கூகிள்இணையதளத்திற்குச் சென்றால் அதன் Doodle வித்தியாசமாக இருந்தது. Google Doodle என்பது அதன் முகப்புப் பக்கத்தில் அந்த நாளில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகளையோ / முக்கிய நபர்களைப் பற்றிய விசேசங்கள் எதேனும் இருப்பின் அவர்களைக் கொண்டாடும் வகையில் ஒரு சிறப்புப்படத்தினை கூகிளின் லோகோவுடன் இணைத்து வெளியிடப்படுவதாகும். 

மிகுந்த கற்பனைத்திறனுடன் உருவாக்கப்பட்ட படங்களை வெளியிடுவதால் இதனை ரசிப்போர் அதிகம். சரி இன்றைக்கு என்ன முக்கியத்துவம் என அறியலாம் என்று ஒரு ஆர்வத்தில் மவுசை படத்தின் மீது நகர்த்தினேன். அந்த செய்தியைப் படித்ததும் தான் மறுபடியும் படத்தை உற்றுநோக்கினேன்.

அழகான விதவித வடிவத்தில் கேக்குகள், சாக்லெட்கள், மெழுகுவர்த்திகள், கிப்ட் பேக் என்று அமர்க்களமாக இருந்தது. அட! இன்று எனக்குப் பிறந்த நாள். "Happy Birthday Thiruthanigesan" என்ற செய்தியுடன்.Wow, I really enjoyed this. இதை எல்லாம் கூகிள் எனக்குத் தராவிட்டாலும் பிறந்த நாளுக்காக இப்படி Doodle அமைத்தது என்னை அதிகமாக உற்சாகப்படுத்தும் வண்ணம் அமைந்தது. Thats why Google No.1 in the user friendly search engine. இணையத்தில் தேடலின் போது கூட அழகான தருணங்களை சில நேரம் நண்பர்களைத் தவிர்த்து தளங்களும் தரமுடியும் என்பதற்கு கூகிள் ஒரு உதாரணம். அதனாலேயே கூகிள் எதிலும் முண்ணணியில் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.


வருடம் முழுவதும் பலரின் முக்கியத்துவத்தை Doodles ஆக பார்த்து வரும் உங்களுக்கு, உங்கள் பிறந்த நாளுக்கென்று விசேசமாக Doodles போட்டு உங்களை மகிச்சிப்படுத்துவது தான் Google Birthday Doodles. இந்த விசயத்தைப் பற்றி எற்கனவே அறிந்திருந்தாலும் அந்த நாளில் வரும் போது தான் ஒரு சந்தோசமே. உங்களுக்கும் பிறந்த நாளில் இதனைப் போன்று Doodles வரவைக்க பிறந்த நாளை  உங்கள் கூகிள் பிளஸ் புரோபைலில் Google Plus ->Edit Profile கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் கணனியில் இருந்து இன்னொருவருடைய கணனியை இயக்குவது எப்படி?( வீடியோ இணைப்பு )


உங்கள் நண்பரின் கணனியில் ஏதாவது பிரச்சனைகாள் மென்பொருள் Install செய்வது, மென்பொருள் இயக்குவது போன்ற விடயங்கள் உங்கள் நண்பருக்கு தெரியவில்லை என்று அவர் உங்களிடம் உதவி கேட்டால் நீங்கள் அவர் வீட்டுக்கோ அல்லது அவர் இருக்கும் இடத்துக்கு சென்றுதான் அதனை சரி  செய்ய வேண்டும்
அவ்வாறு இல்லாமல் உங்கள் கணனியில் இருந்துகொண்டே  Teamviwer என்ற மென்பொருள் மூலம்  உங்கள் Keyboard,Mouse ஐ பயன்படுத்தி  உங்கள்  நண்பரின் கணனியில் ஏற்படும் சில பிரச்சனைகள், மென்பொருள் Install செய்வது மென்பொருள் இயக்குவது போன்றவற்றை சரி செய்ய முடியும்!!

1.முதலில் Teamviwer என்ற மென்பொருளை இங்கு சென்று Download  செய்து கொள்ளவும்

2.Download  செய்த மென்பொருளை உங்கள் கணனியில் Open செய்யவும்,கீழே படத்தில் உள்ளது போல் வரும் அதில்   Install என்பதை Mark செய்து  Nextகொடுக்கவும்


3.அடுத்து கீழே படத்தில் உள்ளது போல் வரும் அதில் Personal /Non-Commercial Use என்பதை Mark செய்து உங்கள் கணனியில் Install செய்துகொள்ளவும்






















4.இப்போது உங்கள் கணனியில் Install செய்த Teamviewer-ஐ ஓபன் செய்யவும்  கீழே படத்தில் உள்ளவாறு வரும் அதில் Your ID ,Password  என்பன இருக்கும் 























5.நீங்கள் உங்கள்  நண்பரின் கணனியை இயக்க வேண்டுமானால் அவருடைய கணனியில் உள்ள Teamviewer-இன் ''Your  ID'' என்பதை வாங்கி உங்களுடையTeamviewer-இல் உள்ள Partner ID-யில் கொடுத்து Connect to Partner என்பதை கிளிக் செய்யவும்

6.பின்பு கீழே படத்தில் உள்ளவாறு ஒரு சிறிய Window வரும் அதில் உங்கள் நண்பரின் Teamviewer-இல் உள்ள Password ஐ கொடுத்து Log In  செய்யவும் அவ்வளவுதான் உங்கள் நண்பரின் கணனி திரை உங்கள் கணனியில் தோன்றும். 












*இப்போது  நீங்கள் உங்கள் நண்பரின் கணனியை உங்கள் Keyboard,Mouse ஐ பயன்படுத்தி இயக்க முடியும்.
*எனது கணனியில் எனது நண்பரின் கணனி திரை  இருப்பதை கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

























குறிப்பு:  இதனை பயன்படுத்தும் இரண்டு கணனிகளிலும் Teamviewerமென்பொருள் Install செய்து இருக்க வேண்டும்,
*இரண்டு கணனிகளிலும் சற்று வேகமான இணைய இணைப்பு இருக்க    வேண்டும்.

Teamviewer மென்பொருளை Download  செய்து பயன்படுத்துவதில்  ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். 


இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்!

உங்களின் முன்னேற்றப் பாதையில் என்றும் உங்களுடன் SOFT LIFE

மென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி...


எண்ணற்ற வீடியோக்கள் குவிந்துகிடக்கும் தளம் YouTube ஆகும். நாம் இங்கு விரும்பும் வீடியோக்கள் பலவற்றையும் பார்க்கிறோம், அதிகம் பிடித்துப்போனால் தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்து வைத்திருப்போம். நாம் இவ்வாறு எமக்கு தேவையான வீடியோக்களை YouTube தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள 'youtube downloder' அல்லது இதுபோன்ற மென்பொருட்களின் தேவை அவசியம். ஆனால் எந்த மென்பொருட்களும் இன்றி 'youtube' வீடியோக்களை தரவிறக்கும் வழிமுறை பற்றி இன்று நாம் பார்க்கலாம்.
step 1. நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL ஐ சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.
(வீடியோவின் URL ஐ Adress Bar இல் காணலாம்). அதாவது Adress Bar இல் உள்ள URL லில் உள்ள www. என்பதை மட்டும் அழித்துவிட்டு, அதற்கு பதிலாக ss என type செய்த பின் ENTER ஐ அழுத்துங்கள். அவ்வளவு தான் இப்போது உங்கள் பக்கம் http://en.savefrom.net/ என்ற தளத்திற்கு தானாகவே திருப்பப்படும்.

step 2. அங்கு, எந்த 'format' இல் [eg.g. 3GP, MP4, FLV etc] வீடியோவை தரவிறக்க வேண்டுமென்பதை தெரிவு செய்துவிட்டு Download இனை 'CLICK' செய்தால் போதுமானது. இப்போது வீடியோ தரவிறக்கமாகத் தொடங்கியிருக்கும்.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னர் கணினியை Auto Restart செய்ய முடியுமா?


சிலர் தமது கணினி எப்போதும் ஆன் செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று நினைப்பர். அதாவது Power Failure ஆனாலும் திரும்ப Power வரும்போது கணினி தானாகவே ஆன் ஆக வேண்டும். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
  
1. உங்கள் கணினி On ஆகும் போது நீங்கள் BIOS Settings பகுதிக்குள் நுழைய வேண்டும். இதை F2 வை பிரஸ் செய்வதன் மூலம் செய்ய முடியும்.

2. இப்போது ACPI / Power settings பகுதியில் அல்லது வேறு பகுதியில் "Action after A/C power failure" என்பதை கண்டுபிடியுங்கள். அதில் 3 வசதிகள் இருக்கும்.

3. இதில் Power On அல்லது Last State என்பதை தெரிவு செய்து கொள்ளவும்.

4. இனி Settings Save செய்து விடவும்.

5. உங்கள் கணினியில் இரண்டு OS இருந்தால் எது Boot ஆக வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்.

இதற்கு My Computer மீது ரைட் கிளிக் செய்து Properties >> Advanced System Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது System Properties என்ற பகுதி ஓபன் ஆகும், அதில் Advanced பகுதியில் Startup and Recovery என்பதற்கு கீழே உள்ள Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
உங்கள் கணினியில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட OS இருந்தால் எது Boot ஆக வேண்டும் என்பதை நீங்கள் சொல்லலாம்.

கவனிக்க, குறிப்பிட்ட OS க்கு Password வைத்து இருந்தால் அந்த பகுதிக்கு வந்து விடும். இதனால் Team Viewer போன்ற மென்பொருள் மூலம் Access செய்ய இயலாது. Remote Access செய்ய நினைப்பவர்கள் Password வைக்காமல் இருப்பது நல்லது.
அவ்வளவு தான் இனி Power போய்விட்டு வந்தாலும் உங்கள் கணினி On செய்யப்பட்டே இருக்கும்.